சௌந்தர்யா ரஜினிகாந்த், EROS , Vedanta இடையே என்ன தொடர்பு ?

பரவிய செய்தி

வேதாந்தா நிறுவனத்தின் இயக்குனரான நரேஷ் சந்திரா EROS நிறுவனத்திலும் சேர்மேனாக இருந்தவர். சௌந்தர்யா ரஜினிகாந்த் EROS நிறுவனத்தின் இயக்குனரில் ஒருவராக இருந்தவர். கோச்சடையான் படத்தினை நரேஷ் சந்திராவின் EROS நிறுவனம் வெளியிட்டது.

மதிப்பீடு

விளக்கம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்ததற்கு போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதே காரணம் என நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். அவரின் இத்தகைய கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

Advertisement

இந்நிலையில், ஸ்டெர்லை ஆலை இயக்குனர் நரேஷ் சந்திரா, EROS நிறுவனம், ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா இடையேயான இணைப்பு பற்றி ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளன. அவற்றின் முழு தகவலையும் விரிவாக காண்போம்.

நரேஷ் சந்திரா :

2004 ஆம் ஆண்டில் வேதாந்தா நிறுவனத்தின் குழுவில் இணைந்தார் நரேஷ் சந்திரா. 2004 முதல் 2013 வரை வேதாந்தாவின் Non-Executive Director ஆக பணியாற்றினார். அதன்பின் 2014-ம் ஆண்டில் வேதாந்தா நிறுவனத்தின்Non-Executive independent Director ஆக நியமிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி, நிறுவனத்தின் chairperson of nomination , Remuneration Committee , corporate social responsibility committee மற்றும் நிறுவனத்தின் தணிக்கை குழுவில் உறுப்பினராகவும், அரசு துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்.

ஜூலை 9-ம் தேதி 2017-ல் வேதாந்தாவின் இயக்குனரில் ஒருவரான நரேஷ் சந்திரா மறைந்தார். அவரது மறைவு தொடர்பாக வேதாந்தா ஜூலை 10-ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

EROS International Plc : 

EROS FILMS

வேதாந்தா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக இருந்த நரேஷ் சந்திரா, திரைப்படங்களை தயாரிக்கும் மற்றும் விநியோகிக்கும் நிறுவனமான EROS International Plc-ல் Non-Executive Director ஆக இருந்தவர். ஏப்ரல் 2006 முதல் ஜூலை 2007-ல் முதற்கட்டமாக Non-Executive Director ஆக நியமிக்கப்பட்டார். EROS International நிறுவனத்தில் 2014 ஜூன் நடைபெற்ற ஆலோசனை குழு கூட்டத்திற்கு பிறகு மீண்டும் Non-Executive Director ஆக நரேஷ் சந்திரா  மற்றும் திலிப் தாக்கர் நியமிக்கப்பட்டார்கள்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் :

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய படம் தான் கோச்சடையான். 2014-ல் வெளியான கோச்சடையான் படத்தின் தயாரிப்பு மற்றும் விநியோகத்தை EROS International Plc நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

அத்தகைய EROS நிறுவனம் 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தென்னிந்தியாவின் EROS நிறுவனத்தின் இயக்குனராக( Creative & Strategy) சௌந்தர்யா ரஜினிகாந்த் நியமிக்கப்பட்டார். கோச்சடையான் படத்தின் வெளியீட்டுக்கு பின்னரே சௌந்தர்யா ரஜினிகாந்த் EROS நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு ஜனவரி-ல் EROS நிறுவனத்தின் Creative & Strategy இயக்குனர் பதவியை விடுப்பதாக அதிகார்பபூர்வ அறிவிப்பை வெளியிட்டார். தனது குழந்தையை வளர்க்கும் பொறுப்பு இருப்பதால் EROS நிறுவனத்தின் தென்னிந்தியப் பிரதிநிதியாக இனி இருக்க போவதில்லை என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

நரேஷ் சந்திரா வேதாந்தா நிறுவனத்தில் இயக்குனராக இருந்தவர். சௌந்தர்யா ரஜினிகாந்த், நரேஷ் சந்திரா EROS நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றினர், EROS நிறுவனம் கோச்சடையான் படத்தை வெளியிட்டது என்பது எல்லாம் சரியான தகவலே. எனினும், ரஜினிகாந்த் இதற்காக தான் சமூக விரோதிகள் என்று குறிப்பிட்டார் என கூறுவது ஆதாரம் அற்றது. இப்படியென வெறும் யூகத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button