Fact Check

தொடங்கிய இடத்திற்கே அழைத்து செல்லும் மாடிப்படி வழி: எவ்வாறு சாத்தியம் ?

பரவிய செய்தி

விசித்திரமான மாடிப்படிக்கள்..! மாடிப்படியில் ஏறி வரும் பொழுது மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வரும்படி மாடிப்படி வழியை வடிவமைத்துள்ளனர். அசாத்தியமான ஒன்றாக கருதப்பட்டு வந்த இந்த வடிவமைப்பை அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தி உள்ளனர். இதில், வீடியோ ட்ரிக்ஸ் ஏதுமில்லை. வீடியோவை முழுமையாக பார்க்கவும்..

மதிப்பீடு

விளக்கம்

தொடங்கும் இடத்திற்கே மீண்டும் வர வைக்கும் விசித்திரமான வடிவமைப்பு கொண்ட படிக்கட்டுகளை திரைப்படங்களில் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தால் செயல்படுத்தி காட்டி அனைவரையும் பிரமிக்க வைத்து இருப்பர். ஆனால், இதே நிஜத்தில் இருந்தால் எவ்வாறு இருக்கும் ஆச்சரியமான ஒன்றாகத் தான் இருக்கும் அல்லவா.!

Advertisement

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள Rochester  institute of technology-ல் முடிவில்லா படிக்கட்டு வழி அமைக்கப்பட்டுள்ளன. இதை “ Escherian stairwell or Penrose stairs என்றழைக்கின்றனர். ஒருவர் படியில் ஏறி திரும்பி மீண்டும் படிக்கட்டில் ஏறும் பொழுது அவர் எங்கிருந்து தொடங்கினாரோ அங்கே வரும்படி இந்த வழியை அமைத்துள்ளனர் எனக் கூறி இந்த வீடியோ பதிவு YouTube, Facebook உள்ளிட்டவையில் வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

“ டச்சு நாட்டைச் சேர்ந்த M.C.Escher என்பவர் அசாதாரணமான பொருட்கள் மற்றும் முடிவில்லாத மாடிப்படி வழி போன்ற முரண்பாடான கட்டிடக்கலை அம்சங்களை ஓவியம் மற்றும் அச்சு வடிவில் செய்யும் கலைஞர் ஆவார். இவரின் எண்ணமே விசித்திரமான Escherian stairwell அமைய முன்னுதாரணமாக இருந்தது. ஆகையால், இந்த வடிவமைப்புக்கு Escherian stairwell என்று வைத்துள்ளனர் “ என்று காரணம் கூறப்படுகிறது.

Youtube video | archived link  

உண்மையில், “ Escherian stairwell ஒரு ஒளியியல் மாயையை. நியூயார்க்கில் உள்ள Rochester  institute of technology-ன் மாணவர் Michael Lacanilao என்பவரே இதை நிகழ்த்தி காட்டியுள்ளார். 2013 April 30-ம் தேதி Michael Lacanilao இந்த வீடியோவை YouTube-ல் பதிவிட்டுள்ளார். “ Escherian stairwell “ உண்மை என்று நம்பக்கூடிய அளவிற்கு செயல்படுத்தி காட்டியதற்கு காரணம் கேமரா வைத்த கோணங்கள், எடிட்டிங் மற்றும் சிறப்பான எப்பெக்ட்ஸ் போன்றவற்றை சிறப்பாக கையாண்ட விதமே.

இருப்பினும், முடிவில்லா மாடிப்படி வழி என்ற மாயையை மற்றவர்களை நம்ப வைக்க உண்மையாக நடப்பது போன்று ஆச்சரியமான, உற்சாகமான முகத் தோற்றத்தை வெளிப்படுத்தி நடித்த அதில் இடம் பெற்ற நடிகர்களுக்கும் பெருமை சேரும்.

“ முதல் பார்வையில் மாடிப்படியில் ஏறுவது போன்ற காட்சிகள் அனைத்தும் ஒரே சாட் ஆக எடுத்து விட்டனர். இதையடுத்து, பிரம்மிக்க வைக்கும் தந்திரங்கள் அனைத்தும் நீக்குவது மற்றும் எடிட்டிங்கில் நிகழ்கிறது. இருவேறு காட்சிகள் இணைக்கப்பட்டது தெரியாமல் இருக்கும் வகையில் split screen effects பயன்படுத்தப்பட்டுள்ளது “.

3.45 நிமிடம் கொண்ட அந்த வீடியோவில் ஓர் இடத்தில் அனைவரும் கைக்கோர்த்து இருப்பவர்களில் இறங்கு பகுதியில் இருக்கும் இளைஞனின் கை அரை நொடிகள் முன்னோக்கி மறைந்து போகிறது.

 Escherian stairwell “ வீடியோ கவனமாக திட்டமிடப்பட்டு , கட்டுகதையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 12000 $ நன்கொடை ஈட்டப்படும் என தீர்மானிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முரண்பாடான வடிவமைப்பில் படிக்கட்டு வழியை அமைப்பது பற்றிய பல கருத்துக்கள் நீண்டகாலமாக இருந்து வந்தாலும் இந்த வீடியோ நவீன தொழில்நுட்ப உதவியுடன் போலியாக உருவாக்கப்பட்ட பிரத்யேக வீடியோ பதிவு மட்டுமே.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button