திமுகவினர் இவிஎம் என டூல்ஸ்பாக்ஸை போலீசில் ஒப்படைத்ததாக பரவும் எடிட் செய்தி !

பரவிய செய்தி
EVM இயந்திரம் என நினைத்து தொழிலாளியை தாக்கி துளையிடும் கருவியை காவல் நிலையத்தில் ஒப்படைத்து முற்றுகையிட்ட சேலம் மாவட்ட திமுக கூட்டணி கட்சியினர் !
மதிப்பீடு
விளக்கம்
தமிழக தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்த பிறகு இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் பகுதியை ராணுவம், காவல்துறை பாதுகாப்பை தாண்டி கட்சியினரும் பாதுகாக்க வேண்டிய கடமை இருப்பதாக திமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, வாக்குப் பதிவு இயந்திரத்தை திருடியதாக நினைத்து டூல்பாக்ஸை கொண்டு சென்றவர்களை திமுகவினர் பிடித்ததாக கிண்டல் பதிவுகள், ட்ரோல் மீம்கள் ஏராளமாய் வெளியாகின.
திராவிடம் தான் தமிழர்களை படிக்க வைத்தது😂
முதல்ல உபிக்கள படிக்க வைங்கடா😂@saiva_twitz @_kandan_ @viyasank @sethulogin @athiyankarthi pic.twitter.com/dQ7ajFTM3a— தென்மதுரை பாண்டியன் (@InspirerV) April 9, 2021
இந்நிலையில், வாக்குப் பதிவு இயந்திரம் என நினைத்து தொழிலாளியை தாக்கி துளையிடும் கருவியை காவல் நிலையத்தில் ஒப்படைத்து முற்றுகையிட்ட சேலம் மாவட்ட திமுக கூட்டணி கட்சியினர் என பாலிமர் செய்தியில் வெளியாகியதாக ஸ்க்ரீன்ஷார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
இவிஎம் இயந்திரம் என நினைத்து துளையிடும் டூல்பாக்ஸை திமுக கூட்டணியினர் போலீசில் ஒப்படைத்ததாக எந்த செய்தியும் வெளியாகவில்லை. பாலிமர் செய்தியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவு என பரவும் ஸ்க்ரீன்ஷார்ட் கூட எடிட் செய்யப்பட்டதே.
பாலிமர் செய்தியில் இடம்பெற்ற புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2021 மார்ச் 28-ம் தேதி செய்யாறு போலீசார் கூலித் தொழிலாளியை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமுமுகவினர் செய்யாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர் ” என தினமணி செய்தியில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
திமுகவை ட்ரோல் செய்வதற்காக இச்செய்தியை எடிட் செய்து இருக்கலாம். ஆனால், இது உண்மையான செய்தி என நினைத்து சமூக வலைதளங்களில் விமர்சிக்கத் தொடங்கி விட்டனர்.
முடிவு :
நம் தேடலில், வாக்குப் பதிவு இயந்திரம் என நினைத்து தொழிலாளியை தாக்கி துளையிடும் கருவியை காவல் நிலையத்தில் ஒப்படைத்து முற்றுகையிட்ட சேலம் மாவட்ட திமுக கூட்டணி கட்சியினர் எனப் பரப்பப்படும் பாலிமர் செய்தி போலியான எடிட் செய்யப்பட்ட செய்தி என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.