This article is from May 02, 2019

மோடிக்கு எதிராக களமிறங்கிய ராணுவ வீரரின் வேட்புமனு நிராகரிப்பு.

பரவிய செய்தி

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடுவதாக அறிவித்த முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூரின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.

மதிப்பீடு

சுருக்கம்

பணியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூரின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்து உள்ளனர்.

விளக்கம்

இந்திய எல்லை ராணுவ வீரர் தேஜ் பகதூர் யாதவ் ஜம்மு காஷ்மீரில் இந்திய-பாக் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு தரமற்ற உணவை வழங்குவதாக மேலதிகாரிகள் மீது குற்றம்சாற்றி பேசிய வீடியோ கட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

இதையடுத்து, ராணுவ வீரர் தேஜ் பகதூர் மீது ஒழுங்கு நடவடிக்கை எனக் கூறி அவரை ராணுவத்தில் இருந்து நீக்கினர்.

இந்நிலையில், 2019 நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து தேஜ் பகதூர் போட்டியிடுவதாக அறிவித்து இருந்தார். எனினும், எந்த கட்சியின் சார்பிலும் நிற்காமல் சுயேச்சையாக நிற்க போவதாக கூறினார்.

ஆனால், அம்மாநில கட்சிகளான சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் கூட்டணி வேட்பாளராக தேஜ் பகதூர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அவரின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூர் வேட்புமனு நிராகரிப்பட்டது சமூக வலை தளத்தில் அதிகம் பரவி வருகிறது.

முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூர் வேட்புமனு நிராகரி த்தற்கான காரணத்தை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

அரசு பணியில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்கள் 5 ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும், பணி நீக்கம் தொடர்பாக சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை என்று கூறுகின்றனர். தேஜ் பகதூர் 2017  ஏப்ரல் 19-ம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்டார்.

முன்னாள் ராணுவ வீரரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட செய்தி சமூக வலை தளத்தில் கேள்விகளை எழுப்பி உள்ளது. வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து தேஜ் பகதூரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்தார்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader