This article is from Aug 02, 2018

ஃபேஸ்புக் கமெண்டில் சில வார்த்தைகளை டைப் செய்தால் சிவப்பாக மாறுவது ஏன் ?

பரவிய செய்தி

Gratula என்று டைப் செய்து உங்கள் முகநூல் கணக்கு பாதுகாப்பானதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். சிவப்பு நிறத்தில் வந்தால் பாதுகாப்பாக உள்ளது என்று அர்த்தம். சிவப்பு நிறத்தில் வரவில்லை என்றால் உங்களின் கணக்கு ஏற்கனவே ஹக் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக password-ஐ மாற்றிக் கொள்ளவும். முயற்சித்து பாருங்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

ஃபேஸ்புக்கில் மகிழ்ச்சிக்காக உருவாக்கப்பட்ட அனிமேஷன்களுக்கு உண்டான keyword-களை ஃபேஸ்புக் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா எனக் கண்டறியும் வார்த்தைகள் என்று தவறாகப் பரப்பி வருகின்றனர்.

விளக்கம்

ஃபேஸ்புக்கில் நண்பர்களின் பிறந்தநாளின் போதும், பிற நிகழ்வுகளுக்கும் வாழ்த்துக்கள், congrats என்று கமெண்டில் டைப் செய்யும் பொழுது சிவப்பு நிறத்தில் எழுத்துக்கள் மாறும், பலூன் பறப்பது போன்று காணலாம். இவை பார்க்கும் அனைவரின் மனதிற்கும் மகிழ்ச்சியை அளிக்கும்.

இவ்வாறான தனிச்சிறப்பு அம்சத்தை “ Text Delight “ என்று அழைக்கின்றனர். மகிழ்ச்சிக்கான வார்த்தைகள் என்பதால் இதில் குறிப்பிடும் வார்த்தைகள் சிவப்பு நிறத்தில் மாறுவதோடு அனிமேஷனையும் பார்க்க முடிகிறது.

“ பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் “ தொடங்கி “ FIFA உலகக்கோப்பை “ வரைக்கும் Delight keywords உள்ளன. ஆங்கிலம் மட்டுமின்றி பல ஃபேஸ்புக்கில் அதிகம் பயன்பாட்டில் உள்ள அனைத்து மொழிகளிலும் இவை இடம் பெறுகின்றன. குறிப்பாக, தமிழ் மொழியும் இடம்பெற்றுள்ளது.

வாழ்த்துக்கள் (Congrats) எனக் கூறினால் பலூன் பறப்பது, Flower Bouquet கொடுப்பது, Flying star , Dancing Hands , colourful confetti , Rainbow thumps up, Thumps up , hearts  என பலவற்றிக்கும் keywords உள்ளன. ஒவ்வொரு மொழியிலும் இதற்கென பிரத்யேக வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிலவை சரியாக வேலை செய்கிறது, சிலவை பயன்பாட்டில் உள்ளதா என்பதை வார்த்தைகளை பயன்படுத்தி பார்க்கும் பொழுதே தெரிகிறது.

“ தமிழில் வாழ்த்துக்கள் என்றுக் கூறினால்  சிவப்பு நிறத்தில் மாறி பலூன் பறப்பது மட்டும் சரியாக பயன்பாட்டில் உள்ளது. இதில், வாழ்த்துக்கள் என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் congrats என்பது போல் ” அங்கேரிய மொழியில் Gratula என்று அர்த்தம் ” என அனைவருக்கும் தெரிய வாய்ப்பில்லை “.

ஆகையால், Gratula என்ற வார்த்தை ஃபேஸ்புக் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா என்று கண்டறியும் வார்த்தைகள் எனக் கூறி தவறான தகவல்கள் பகிரப்படுகின்றன. இந்த வார்த்தையை டைப் செய்தால் சிவப்பு நிறத்தில் மாறும் என்று கூறி பகிரப்படும் வார்த்தைகளான Gratula, BFF, XO, XOXOXO போன்ற அனைத்து வார்த்தைகளும் Delight keywords-ஐ சேர்ந்தவையே.

ஆக, மகிழ்ச்சிக்காக இந்த வார்த்தைகளை பயன்படுத்துங்களே தவிர ஃபேஸ்புக் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா என்று சோதித்து பார்க்க அல்ல.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader