பொள்ளாச்சி விவகாரம் பற்றி பரவும் வதந்திகள்

மதிப்பீடு

பொள்ளாச்சி விவகாரம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது . பலரும் தங்கள் கண்டனத்தையும் , வலியையும் வெளிப்படுத்திவருகிறார்கள் . இதனிடையே பல்வேறு வதந்தியும் பரவி வருகிறது .

பைக் பாபு :

Advertisement

குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு முகநூல் பக்கம் மற்றும் இதில் சமந்தப்பட்ட அனைவரின் முகநூல் பக்கத்தை நம்ம இன்டெர்நெட் james Bond-கள் . சும்மா பிரித்து மேய்ந்து வருகிறார்கள் . ஆனால் பொறுப்புள்ள 007 ஆக இவர்கள் நடந்ததாக தெரியவில்லை .

நக்கீரன் இதழில் இதில் சமந்தப்பட்ட ஒருவர் ‘பைக் பாபு ‘ என்று குறிப்பிட நம்ம ஆட்கள் திருநாவுக்கரசு முகநூல் நண்பர் பைக் பாபு என்பவரை பிடித்து இவன்தான் டா அவன் என்று சீறி வருகிறார்கள் . அவர் குறப்பிட்ட கட்சியை சேர்ந்தவராக இருக்க இன்னும் உற்சாகம் ஆகி புதுப் புது கதை எழுதி வருகிறார்கள் .

உண்மையான பாபு கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறான் . இவர் இன்றும் முகநூலில் அடித்து துவைக்கும் பாண்ட்களுக்கு பதில் எழுதிவருகிறார் பாவம் ..

காவல் அதிகாரி பாண்டியராஜன் :

இவர் தான் டாஸ்மாக் போராட்டத்தின் போது அப்பாவி பொது மக்கள் மீது தாக்குல் நடத்தினார் அதிலும் குறிப்பாக பெண்களை அடித்தார் . காதில் ஒரு பெண்ணை அரைந்தவரும் இவரே . அப்போது Adsp ஆக இருந்தவர் . இப்போது Sp ஆக இந்த சர்சைக்குரிய வழக்கை விசாரித்து வருகிறார் . இவரை நம்பலாமா ? என்று பரவுகிறது .

Advertisement

உண்மை தான் . பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய அந்த அதிகாரி தான் அந்த மாவட்டத்தில் SP ஆக உள்ளார் ..

நாகராஜ் :

இதில் மேலும் சிக்கிய அப்பாவி அரச குமார் நாகராஜ் . இவரின் முகநூல் கணக்கை படம் பிடித்து ஆளுக்கு ஆள் இந்த விவாகரத்தில் சமந்தப்பட்ட ஆட்களுடன் சேர்ந்து அனுப்பி திட்டி தீர்க்க . பாவம் இவர் இப்போது அப்படி எழுதும் பக்கத்தில் எல்லாம் அதை நீக்க வேண்டிவருகிறார் . இதில் சிலர் இவரை கிண்டல் செய்தது தான் பெருங்கொடுமை .அவர் உருக்கமாக நம்மிடம் பேசியது : https://www.youtube.com/watch?v=Jm5EXi4MJ34&t=74s

ஒரு நபருக்கு பல முகநூல் நண்பர்கள் இருப்பார்கள் , அதில் இருப்பவர் எல்லாம் நெருக்கிய நண்பர் என்றும் . அதனால் ஒருவர் செய்யும் குற்றத்திற்கு அவர் நண்பர்களும் பொறுப்பு என்றும் நினைப்பது சரியில்லை . மேலும் தவறாக யாரையும் சித்தரித்து எழுதுவதும் ஆபத்து . அவர் குடும்ப நிலை பற்றி யோசிக்க வேண்டாமா ?

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close