This article is from Dec 17, 2019

CAB-க்கு எதிராக பெண் வேடத்தில் வந்த போலியான போராட்டகாரரா ?

பரவிய செய்தி

ஆண் பெண் வேடம் அணிந்து போராடுவது ரொம்ப சில்லறை தனம்டா. நியாயமான முறையில் அமைதியா போராடி பேச்சு வார்த்தைகள நடத்துங்க.

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

விஸ்வாமித்திரர் என்ற முகநூல் பக்கத்தில், ” ஆண் பெண் வேடம் அணிந்து போராடுவது ரொம்ப சில்லறை தனம்டா. நியாயமான முறையில் அமைதியா போராடி பேச்சு வார்த்தைகள நடத்துங்க” என்ற வாசகத்துடன் வெளியான புகைப்படத்தில் முஸ்லீம் பெண்கள் அணியும் பர்தா உடையில் ஆண் ஒருவர் சிக்கிக் கொண்ட புகைப்படத்தை பகிரப்பட்டது.

CAB மற்றும் NRC-க்கு எதிராக போராடுவதாக கூறுபவர்கள் முஸ்லீம் பெண்களை போன்று பர்தா அணிந்து போராடுவதாக இப்புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது.

மேலும், இந்த நபர் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் (JMIU) போராட்டக்காரர்களில் ஒருவர் என இதே  புகைப்படம் இந்திய அளவில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

ஆண் ஒருவர் முஸ்லீம் பெண் வேடமிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறும் புகைப்படம் போலியானவை. அவை இந்தியாவை சேர்ந்தவை அல்ல. கடந்த 2017-ல் ” கோவிலில் குண்டு வைக்க பெண் வேடத்தில் வந்த தீவிரவாதியை பெங்களூரில் கைது செய்துள்ளனர் ” என இதே புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தவறாக வைரலாகின. அதை தவறான தகவல்கள் என யூடர்ன் மீம்ஸ் மற்றும் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : பெண் வேடத்தில் வந்த தீவிரவாதி கைதா ?

” 2017-ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம், எகிப்து நாட்டில் பர்தா அணிந்து வந்த பெண்ணின் மீது சந்தேகப்பட்ட பொதுமக்கள் அவரைப் பிடித்து சோதனை செய்தனர். அவ்வாறு பொதுமக்களிடம் அகப்பட்டவர் உண்மையில் பெண் இல்லை. பெண் போல வேடமணிந்து குழந்தைகளை கடத்துபவன் என்று தெரியவந்ததும் அவனை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர் ” என்ற தகவல் கிடைத்தது.

” sharkiatoday.com என்ற இணையதளத்தில் மேற்காணும் புகைப்படத்தில் இருப்பவரின் பல புகைப்படங்கள் கடந்த 2017-ல் வெளியாகி இருப்பதை காணுங்கள். மேலும், 2017-ல் பதிவான ட்விட்டர் பதிவையும் காணலாம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு எகிப்து நாட்டில் கைது செய்த நபரின் புகைப்படத்தை வைத்து இந்தியாவில் தவறான தகவலை பரப்பி வருகின்றனர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader