This article is from Aug 31, 2020

இது செயற்கையாக உருவாக்கப்படும் முந்திரிப் பருப்பு அல்ல| உண்மை என்ன ?

பரவிய செய்தி

செயற்கையாக உருவாக்கப்படும் முந்திரிப்பருப்பு! இது ஒரு எச்சரிக்கை பதிவு!

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

இயந்திரத்தில் முந்திரிப்பருப்பு அச்சினைப் போன்று உருவாக்கப்பட்டு தனியாக எடுக்கப்படும் உணவு பொருள் ஒன்றின் வீடியோ காட்சிக்கு பின்னால் ஒருவர் பிற மொழியில் பேசுவது இடம்பெற்று இருக்கிறது. இந்த வீடியோவை தமிழில் செயற்கையாக முந்திரிப்பருப்பு உருவாக்குவதாகக் கூறி பகிர்ந்ததால் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

Facebook link | archive link 

உண்மை என்ன ? 

இயந்திரங்களில் முந்திரிப்பருப்பு வடிவில் தயாரிக்கப்படும் பொருள் என்னவென்று அறிய கீ வார்த்தைகளைக் கொண்டு தேடிய போது அது முந்திரிப் பருப்பு வடிவில் தயாரிக்கப்படும் உணவு பொருள்(நொறுக்குத்தீனி) என அறிய முடிந்தது. வைரலாகும் வீடியோவைப் போன்று சில வீடியோக்கள் யூடியூப் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

இவை முந்திரி வடிவில் இருக்கும் பிஸ்கெட்களே. சிறிய அளவில் இத்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். உண்பதற்கு முன்பு அவற்றை வறுக்க வேண்டும். போலியான முந்திரிப் பருப்பாக இருந்தாலும் நிறம், அளவும், சுவை ஆகியவற்றினை உங்களால் உணர முடியும். முந்திரி வடிவிலான பிஸ்கெட்டைத் தயாரிக்கும் வீடியோவை இந்திய அளவில் தவறாக பரப்பி வருகின்றனர்.

Twitter link | archive link

மேலும் படிக்க : போலியான பால் தயாரிப்பதாக பரவும் வீடியோ | உண்மை என்ன ?

இதற்கு முன்பாகவும், செயற்கையான முறையில் பால் தயாரிப்பதாக தவறான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது. தற்போது வைரலாகும் வீடியோவில், தயாரிக்கப்படும் பொருளின் சுகாதாரம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தால் உகந்ததாக இருந்து இருக்கும். ஆனால், போலியான முந்திரிப் பருப்பு என தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், செயற்கையாக உருவாக்கப்படும் முந்திரிப்பருப்பு என எச்சரிக்கை செய்து பரப்பப்படும் வீடியோவில் தயாரிக்கப்படுவது முந்திரி வடிவிலான பிஸ்கெட் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader