நாட்டில் கள்ள பணத்தின் புழக்கம் 480 சதவீதம் உயர்ந்துள்ளது.!

பரவிய செய்தி

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் நாட்டில் கள்ள நோட்டுகளின் புழக்கம் 480 சதவீதம் அதிகரித்துள்ளது என்ற திடுக்கிடும் தகவலை மத்திய புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

கள்ள நோட்டுகளின் புழக்கம் மற்றும் சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றம் ஆகியவை பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் 480 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

விளக்கம்

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள கருப்பு பணத்தை ஒழிப்பதாகக் கூறி புழக்கத்தில் இருந்த உயர் மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பதாக அறிவித்தார். அதற்கு பதிலாக புதிய 2000, 500, 200 ரூபாய்கள் அறிமுகம் செய்துள்ளனர்.

Advertisement

எந்தவித முன் ஏற்பாடும் இன்றி அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் உள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை கூட எடுக்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்டனர். சிறு, குறு தொழில்கள், தினக்கூலி மற்றும் ஏழை, நடுத்தர மக்கள் என பல கோடி பேர் பாதிக்கப்பட்டனர்.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் கருப்பு பணம் ஒழிந்து, நாடு முன்னேறும் என்று பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், முன்பிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கம் செய்த பிறகு நாட்டில் கள்ள பண பயன்பாடு அதிகரித்துள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய நிதி நுண்ணறிவு புலனாய்வு பிரிவின் அறிக்கையின் படி, 2016-ம் ஆண்டில் நடைபெற்ற உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுகளின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாட்டில் உள்ள அனைத்து விதமான வங்கிகளிலும், மற்ற நிதி நிறுவனங்களிலும் கள்ள பணத்தின் புழக்கம் மற்றும் சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றம் 480 சதவீதம் உயர்ந்துள்ளது. இதில் 2016-2017 நிதியாண்டில் மட்டும் ரூ.3.22 லட்சம் அதிகரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முந்தைய 2015-2016 நிதியாண்டில் 4.10 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் பரிமாற்றம் கண்டறியப்பட்டது. ஆனால், அது 2016-2017 நிதியாண்டில் ரூ.7 லட்சமாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கள்ள பணம் குறித்த அறிக்கையில் இதுவே அதிகபட்சமானது என்றுள்ளனர்.

Advertisement

இந்த அறிக்கைகள் பிடிபட்ட கள்ள நோட்டுகளின் மதிப்பை மட்டும் கூறுபவை அல்ல. நாட்டில் கள்ள பணத்தின் பயன்பாடு, கள்ள நோட்டுகள், பணப்பரிமாற்றம் உள்ளிட்டவற்றை மையமாக கொண்டது.

2016-ல் 500,1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்வதால் நாட்டில் உள்ள கருப்பு பணம் வெளிவரும், நாட்டின் பொருளாதாரம் உயரும் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடந்த முடிந்த ஒரு ஆண்டில் மட்டும் இத்தகைய பெரிய (ஏ)மாற்றத்தை காண முடிகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழிந்ததா என்று பலரும் குரல் எழுப்பிய போதிலும், அது பற்றிய விவரத்தை மத்திய அரசு வெளியிட மறுக்கிறது.

இந்நிலையில், தற்போது வெளியாகிய நிதி நுண்ணறிவு புலனாய்வு பிரிவின் அறிக்கை பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியை சந்தித்துள்ளது என்று நிரூபித்துள்ளது. எதற்காக பிரதமர் மோடி 500,1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்கம் செய்யதாரோ, அதற்கான எதிர்வினை பலன் தற்போது கிடைத்துள்ளது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button