தேர்தலில் கள்ள ஓட்டுப் போட போலி கை விரல் உறைகள் தயாரிப்பா ?

பரவிய செய்தி

தேர்தலில் ஓட்டுப் போட போலி விரல்கள் தயாராகிறது என்ற தகவல் தலையைச் சுற்றுகிறது.

மதிப்பீடு

சுருக்கம்

எது பொய் : இந்திய தேர்தலில் கள்ள ஓட்டு போட தயாரிக்கப்பட்ட போலி விரல்கள் எனக் கூறி பகிரப்படும் விரல்களின் படங்கள் அனைத்தும் ஜப்பான் நாட்டில் விரல்கள் இல்லாதவர்களுக்கு பயன்படுத்த உருவாக்கப்பட்டவை.

 

 

விளக்கம்

இந்திய தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதற்காக போலியான கை விரல்களின் உறைகள் தயாரிக்கப்படுவதாக சில நாட்களாக தமிழில் அதிகம் பகிரப்படுவதை பார்த்து இருக்கலாம்.

Advertisement

ஆனால், அவ்வாறு பரவும் செய்தியில் அனைத்திலும் இருக்கும்  புகைப்படங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை அல்ல என்பதே உண்மை. எனினும், 2017-ல் உத்தரப்பிரதேச தேர்தலுக்கு செயற்கை  விரல் உறைகளுக்கு அரசியல் கட்சி ஒன்று  அதிகளவில் ஆர்டர் கொடுத்ததாக புகார்கள் எழுந்துள்ளது. விரிவாக படிக்கவும்.

செயற்கை விரல்கள் :

போலியான விரல்கள் என பரவும் படத்தில் இருப்பவை கை விரல்களை இழந்தவர்களுக்காக பிரத்யேகமாக ஜப்பான் நாட்டில் தயாரிக்கப்பட்ட ” Prosthetic Fingers ” எனும் செயற்கை விரல்கள். இந்த விரல் பற்றி ஜப்பானில் 2013 ஆம் ஆண்டிலேயே செய்திகளில் வெளியாகி உள்ளது.  

இந்த செயற்கை விரல்கள் பார்ப்பதற்கு உண்மையான விரல்கள் போன்றே உருவாக்கப்பட்டு இருக்கும். பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒவ்வொரு விரலின் விலை $3000 டாலர்கள் இருக்கலாம் எனக் கூறுகின்றனர். மேலும், கை , விரல் உள்ளிட்ட பல உறுப்புகள் செயற்கையாக உருவாக்கப்பட்டு வருகிறன எனபது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

தமிழில் பரவும் புகைப்படங்கள் அனைத்தும் ஜப்பானில் செயற்கை விரல்கள் தயாரிக்கும் போது எடுக்கப்பட்டவையே.  2013-ல்  abc news-ல் ஜப்பானின் செயற்கை விரல்கள் கடத்தல் கும்பல்களால் தவறாக பயன்படுத்தப்படும் அச்சம் உள்ளதாக கூறி உள்ளனர். (வீடியோ லிங்கில்)

உத்தரப்பிரதேச தேர்தல் : 

இரண்டு வருடங்களுக்கு முன்பு 2017 மார்ச் மாதத்தில், உத்தரப்பிரதேசத் தேர்தலுக்காக முக்கிய கட்சி ஒன்று சிலிக்கான் விரல்களை அதிகளவில் தேவை என ஆர்டர் செய்துள்ளதாக மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி ஊடகங்களில் விவாதங்களாக மாறியது.

Delhi born life-ஐ சேர்ந்த கன்சல்டன்ட் தன்னுடைய artificial limbs நிறுவனத்தில் முக்கிய கட்சி ஒன்றின் மூலம் சிலிக்கான் விரல்களுக்கு(300 அல்லது 500) பெரியஆர்டர் கொடுத்ததாக  சாம்பு குமார் யாதவ்  கூறியதாக இந்தியா டுடே வில் வெளியாகி உள்ளது.

செயற்கைகள் விரல்கள் விற்பனை இந்தியாவிலும் நடைபெறுகின்றன. ஆனால், அவற்றின் மதிப்பு சிறிது அதிகம் தான்.  Delhi’s Vimhans Hospital மூலம் இயங்கும் P&O இன்டர்நேஷனல் இன்க் -ல் இருக்கும் Prosthetic Consultants கூறுகையில், 10 சிலிக்கான் விரல்களின் விலை ரூ.1.10 லட்சம் ஆகும். தேர்தலில் பயன்படுத்த சாத்தியமா என அவர்கள் கூறியதாக இந்தியா டுடேவில் வெளியாகியுள்ளது.

தேர்தலுக்காக உத்தரப்பிரதேசத்தில் செயற்கை விரல்களை அதிக அளவில் ஆர்டர் கொடுக்கப்பட்டது என செய்திகளில் வெளியாகி இருந்தாலும், இவை நடந்தது 2017 ஆம் ஆண்டில் மற்றும் பரவும் படங்கள் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவை என்பதே உண்மை.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button