சவுதி அரேபியாவில் உள்ள இந்திய முஸ்லிம்கள் வாக்கு செலுத்த ஆகும் பயண செலவை இஸ்லாமிய அமைப்பு ஏற்பதாகப் பரவும் போலி கடிதம்!

பரவிய செய்தி

சவுதி அரேபியாவில் உள்ள இந்திய முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வந்து காங்கிரசுக்கு ஆதரவாக வாக்கு செலுத்த கர்நாடகாவில் உள்ள முஸ்லிம் வாரியம் நிதி உதவி அளிக்கிறது. 

X link

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, சவுதி அரேபியாவில் உள்ள இந்திய முஸ்லிம்கள் இந்தியாவிற்குச் சென்று வாக்கு செலுத்த ஆகும் செலவை ’அசோசியேசன் ஆஃப் சன்னி முஸ்லிம்ஸ்’ என்னும் அமைப்பு ஏற்றுக்கொள்வதாக ஒரு கடிதம் இந்து மக்கள் கட்சி, சரவண பிரசாத் உட்படப் பல வலதுசாரிகளும் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர். 

X link

உண்மை என்ன?

பரவக் கூடிய கடிதத்தில் உள்ள  ’அசோசியேசன் ஆஃப் சன்னி முஸ்லிம்ஸ்’ என்னும் அமைப்பின் பெயர் கொண்டு கூகுள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தேடினோம். அப்பெயரில் எந்த இஸ்லாமிய அமைப்பும் இல்லை என்பதை அறிய முடிந்தது.

மேற்கொண்டு கடிதத்தில் உள்ள ‘2-11TH STREET KHALID BIN WALEED ROAD PLOT NO. UMM HURAIR ONE DUBAI UNITED ARAB EMIRATES’ என்ற முகவரியைக் கொண்டு இணையத்தில் தேடியதில், அந்த இடத்தில் பாகிஸ்தான் தூதரகம் இருப்பதைக் காண முடிந்தது.

அவர்களது இணையதள பக்கத்தில் இந்தியத் தேர்தல் தொடர்பாக எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. மேலும் அப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளதாக எந்த ஊடகத்திலும் செய்தியும் வெளியாகவில்லை.

இவற்றில் இருந்து ’அசோசியேசன் ஆஃப் சன்னி முஸ்லிம்ஸ்’ என்னும் அமைப்பின் பெயரில் பரவக் கூடிய கடிதம் போலியாக உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

முடிவு: 

சவுதி அரேபியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வந்து காங்கிரசுக்கு ஆதரவாக வாக்கு செலுத்த ஏதுவாக, அதற்கான செலவை அசோசியேசன் ஆஃப் சன்னி முஸ்லிம்ஸ் என்னும் அமைப்பு ஏற்றுக் கொள்வதாகப் பரவும் கடிதம் போலியாக உருவாக்கப்பட்டது. அப்பெயரில் எந்த அமைப்பும் இல்லை. 

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader