This article is from Dec 18, 2019

போலீஸ் வேடத்தில் வந்து மாணவர்களை தாக்குவது ABVP-ஐ சேர்ந்தவரா ?

பரவிய செய்தி

போலீஸ் வேடத்தில் வந்த ABVP. பயங்கரவாதிகள். மாணவர்களை கடுமையாக தாக்கியவன் போலீஸ் வேடம் தாக்கியவன் இவன்தான்.

மதிப்பீடு

விளக்கம்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக போராடும் மாணவர்களை தாக்கியவர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அகில பாரதிய வித்யாதி பரிஷத் (ABVP) உடைய உறுப்பினர் என ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் உடையில் காவலர் தோற்றத்தில் இருப்பவரின் புகைப்படத்தையும், பாரத் ஷர்மா என்பவரின் முகநூல் கணக்கையும் இணைத்து சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரல் செய்து வருகின்றனர்.

Facebook link | archived link

உண்மை என்ன ?

சாதாரண மக்களை போல் ஜீன்ஸ் அணிந்து கொண்டு, ஆனால் காவலர்கள் போல் தலை கவசம், லத்தி, பாதுகாப்பு உடையுடன் இருக்கும் நபர்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள் அல்ல, அரசியல் சார்ந்தவர்கள் போராடும் மக்களின் மீது வன்முறையை வெளிப்படுத்த அனுப்பட்ட ஆட்கள் என்ற கருத்து சமூக வலைதளங்கள் முழுதுவம் பரவி உள்ளது.

சிவப்பு நிற டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து இருக்கும் நபர் ABVP-யைச் சேர்ந்த பாரத் சர்மா என பரவிய புகைப்படத்தில் இருப்பவர் பாரத் சர்மா அல்ல, அவர் கான்ஸ்டபிள் அரவிந்த் குமார் என டெல்லி போலீஸ் தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும், அந்த காவலர் எந்தவொரு மாணவர் அமைப்பிலும் இல்லை என மறுப்பு தெரிவித்து உள்ளார். அரவிந்த் குமார் தெற்கு டெல்லியில் உள்ள வாகன திருட்டு கும்பலுக்கு எதிரான (AATS) அமைப்பில் பணியாற்றி வருகிறார். அவர் ABVP-யைச் சேர்ந்தவர் அல்ல.

டெல்லியில் காவலர் அமைப்பில் இருப்பவர்கள் மக்களோடு மக்களாக சாதாரண உடையில் இருப்பதாக காவலர்கள் தரப்பிலும், ஊடகச் செய்தி தரப்பிலும் கூறப்படுகிறது.

மேலும், சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு பகிரப்படும் பாரத் சர்மா தன் ட்விட்டர் பக்கத்தில் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், கலவரத்தில் போலீஸ் உடையில் தான் ஈடுபட்டதாக பொய்யை பரப்பும் அனைவரின் மீதும் அவதூறு வழங்கு தொடர உள்ளதாகவும் பதிவிட்டு உள்ளார்.

Twitter link | archived link 

மேலும், ABVP தன் முகநூல் பக்கத்தில் வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர் ABVP-யைச் சேர்ந்தவர் அல்ல, அவர் காவல்துறையைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டு பதிவிட்டு உள்ளனர்.

ஆகவே, ABVP-யைச் சேர்ந்த பாரத் சர்மா போலீஸ் உடையில் மாணவர்களுக்கு எதிராக ஈடுபட்டதாக பரவும் செய்திகள் தவறானவை என புரிந்து கொள்ள முடிகிறது. தனிநபரின் மீது மக்களின் கோபம் தவறாக திருப்பப்படும் பொழுது , அது அந்த நபருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

Facebook link | archived link 

மற்றொரு வீடியோவில் மாணவரை எட்டி உதைக்கும் வீடியோவில் இருப்பவர் பாரத் சர்மா என பரவி வருகிறது. அதற்கு பதில் அளித்த காவல்துறை, ” அந்த நபரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். டெல்லி போலீஸ் உடையில் புகைப்படத்தில் இருக்கும் நபரும், வீடியோவில் இருப்பவரும் ஒரே ஆள் இல்லை என தெளிவுப்படுத்தி உள்ளனர். அது தொடர்பாக விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Twitter link | archived link 

இந்தியா டுடே வெளியிட்ட கட்டுரையில், போலீஸ் உடையில் இருக்கும் நபர் பாரத் சர்மா இல்லை, ஆனால் மாணவரை எட்டி உதைக்கும் வீடியோவில் இருப்பது பாரத் சர்மா என புகைப்படத்துடன் குறிப்பிட்டு உள்ளனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader