This article is from Nov 10, 2018

திரைப்படக் காட்சியை வைத்து வைரலாகும் வதந்தி.

பரவிய செய்தி

உத்தரப்பிரதேசத்தில் பொது இடத்தில் வைத்து ஒரு பெண்ணை மானபங்கம் படுத்தும் எம்.எல்.ஏ..

கண்டுக்கொள்ளாத ஊடகம், வேடிக்கைப் பார்க்கும் காவல்துறை.. அதிகம் ஷேர் செய்யவும்.

மதிப்பீடு

சுருக்கம்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெண்ணிடம் எம்.எல்.ஏ தவறாக நடந்து கொண்ட சம்பவம் என பரவும் புகைப்படங்கள் சென்ற ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்றதாக பரவி கலவரத்தை உருவாக்கிய வதந்தியே.

விளக்கம்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் எம்.எல்.ஏ ஒருவர் பெண்ணை பொது இடத்தில் வைத்து தவறாக நடந்து கொள்வதை ஊடகங்கள் கூட பெரிதுப்படுத்தவில்லை என பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவுகள் 11 ஆயிரம் ஷேர், லைக்குகள், கமெண்ட்களை பெற்று அதிகம் வைரலாகி வருகிறது.

இப்படத்தின் கமெண்ட்ஸில் சிலர் பார்ப்பதற்கு திரைப்படம் போன்று உள்ளது, பொய்யான தகவல் எனவும் கூறுகின்றனர். இப்படங்கள் தவறான ஒன்று என சிலர் எளிதாகப் புரிந்து கொள்கின்றனர். எனினும், ஆயிரக்கணக்கான பேர் இதனை உண்மை என நினைத்து பகிர்ந்து வருகின்றனர்.

திரைப்படக் காட்சி :

2015-ல் வெளியான “ Aurat Kilona Nahi “ எனும் போஜ்புரி திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கும் காட்சி தான் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வதந்தி பரவுவது முதல் முறை அல்ல. சென்ற ஆண்டே இதே படங்களுடன் வதந்திகள் பரவி கலவரம் மூண்டது. இதை பற்றி YOUTURN அப்போதே வெளியிட்டிருந்தது. 

சென்ற ஆண்டு மேற்கு வங்கத்தில் பொது இடத்தில் பாதிக்கப்பட்ட பெண் என பரவிய படங்களுடன் பிற பகுதியில் நடந்த காட்சிகள் மற்றும் ஆடியோக்களை இணைத்து வதந்தியை பரப்பியதாக மேற்கு வங்க காவல்துறைத் தெரிவித்தனர்.

” இதனைப் பரப்பியதற்கு பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தருண் செங்குப்தா கைது செய்யப்பட்டார். வதந்திகளால் மத கலவரங்கள், சாதிய கலவரங்கள் உருவாவதாக கண்டனங்கள் தெரிவித்து இருந்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி “.

திரைப்படக் காட்சி என அறிந்த உடன் கேலியாக கடந்து சென்றாலும் இதுபோன்ற படங்களும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader