பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்கள் ரத்து – எடிட் நியூஸ் கார்டு!

பரவிய செய்தி
பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் – தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.
மதிப்பீடு
விளக்கம்
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து பல நாட்களாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் என தமிழக பாஜகத் தலைவர் எல்.முருகன் கூறியதாக எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்படுகிறது. வைரலாகும் நியூஸ் கார்டை உன்னிப்பாக பார்த்தாலே எடிட் செய்தது நன்றாக தெரிகிறது.
ஆனால், நையாண்டிக்காக வேண்டுமென்றே எடிட் செய்த நியூஸ் கார்டை சமூக வலைதளங்களில் உலாவ விட்டு உள்ளனர். இதை வைத்து, வேளாண் சட்டத்தை கொண்டு வந்ததே பாஜக தானே, தற்போது என்ன ராகுல் காந்தி ஆட்சியா, இம்ரான் கான் ஆட்சியா என கிண்டல் செய்து வருகிறார்கள்.
பெண்கள் மீதான தாக்குதலை பாஜக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது
– எல்.முருகன், தமிழக பாஜக தலைவர்@Murugan_TNBJP | @BJP4TamilNadu | #TNElections2021 | #TNPolitics pic.twitter.com/n2faukVe0K
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) January 3, 2021
2021 ஜனவரி 3-ம் தேதி புதியதலைமுறை செய்தியில், ” பெண்கள் மீதான தாக்குதலை பாஜக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது – எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் ” என வெளியான நியூஸ் கார்டில் எடிட் செய்து பரப்பி வருகிறார்கள்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.