விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்த போது எடுக்கப்பட்ட வீடியோவா ?

பரவிய செய்தி
விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்து விட்டனர். விவசாயிகள் போராட்டம் நாடுமுழுவது பரவட்டும்! காவி கார்ப்பரேட் பாசிச அரசை வீழ்த்தட்டும்!
மதிப்பீடு
விளக்கம்
உண்மை என்ன ?
விவசாயச் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டங்கள், பேரணிகளை நடத்தி வருகின்றனர். மேலும், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து விவசாயிகள் போராட்டம் நடத்த தலைநகர் டெல்லியை நோக்கி சென்றுள்ளனர்.
புராரி பகுதியில் உள்ள நிரன்கரி மைதானத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், மத்திய அரசு விவசாய அமைப்புகள் உடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது. எனினும், விவசாயிகளை தடுக்க சில இடங்களில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை கூட்டத்தில் வீசிய காட்சிகள் செய்திகளில் வெளியாகி வருகின்றன.
விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்த போது எடுக்கப்பட்ட வீடியோ என பல வீடியோக்கள், புகைப்படங்கள் செய்திகளில் வெளியாகினாலும், இந்த வீடியோ சமீபத்திய செய்திகளில் ஏதும் வெளியாகவில்லை.
இந்த வீடியோவில் இருந்து ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2018-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி கம்யூனிஸ்ட் கேரளா என யூடியூப் சேனலில், ” ஹிமாச்சலப் பிரதேசத்தில் சிவப்பு பூக்கள் பூத்ததாக ” இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது.
இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என உறுதியாக தெரியவில்லை. இருப்பினும், பழைய வீடியோவை பகிர்ந்து உள்ளார்கள் என தெளிவாய் தெரிகிறது.
முடிவு :
நம் தேடலில், விவசாயச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிங்கள் தலைநகர் டெல்லிக்கு சென்றுள்ளனர் என்பது உண்மை என்றாலும், விவசாயிகள் டெல்லியில் நுழைந்ததாக பகிரப்படும் வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.