பஞ்சாப் விவசாயிகள் ஆர்டிகிள் 370 பேனர் உடன் போராடினார்களா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக ஆர்டிகிள் 370 மற்றும் 35A ஆகியவற்றை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற வாசகம் இடம்பெற்ற பேனரை ஏந்தி இருக்கும் சீக்கியர்களின் புகைப்படம் விவசாயிகள் போராட்டத்தில் இடம்பெற்றதாக மீம்ஸ் உள்ளிட்டவை வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2019 ஆகஸ்ட் 8-ம் தேதி Shiromani Akali Dal Amrisar முகநூல் பக்கத்தில் சீக்கியர்கள் ” ஆர்டிகிள் 370 , 35A ஆகியவற்றை மீண்டும் கொண்டு வர வேண்டும் ” என்கிற வாசகத்துடன் கூடிய புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.
2019 ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, ஆர்டிகிள் 370 மற்றும் பிரிவு 35A ஆகியவற்றை நீக்குவதாக பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதை அறிவித்த சில நாட்களில் அந்த சட்டத்தை மீண்டும் கொண்டு வர சீக்கியர்கள் போராடி உள்ளனர்.
பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். டிசம்பர் 3-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தரப்பில் விடுக்கப்பட்ட அழைப்பையும் நிராகரித்து போராட்டத்தைத் தொடர்கிறார்கள்.
மேலும் படிக்க : விவசாயிகள் போராட்டத்தில் டர்பன் அணிந்த வந்த இஸ்லாமியர் என வதந்தி வீடியோ !
மேலும் படிக்க : டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதியா ?
மேலும் படிக்க : விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசங்களா ?
மேலும் படிக்க : சாஹின் பாக் பாட்டி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டாரா ?
விவசாயிகள் போராட்டமும் தொடர்பாக பல புரளிகள், பழைய வீடியோக்களை தவறாக பரப்பி வருவதை நாம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம்.
முடிவு :
நம் தேடலில், விவசாயிகள் போராட்டத்தில் காஷ்மீர் ஆர்டிகிள் 370 மற்றும் 35A ஆகியவற்றை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற வாசகம் இடம்பெற்ற பேனரை கொண்டு போராடியதாக பரப்பப்படும் புகைப்படம் தவறானது. அது கடந்த வரும் ஆர்டிகிள் 370 மற்றும் 35A-வை நீக்கிய போது பயன்படுத்தப்பட்டது என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.