விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் எனப் பரப்பப்படும் வதந்தி!

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகையில், போராட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு என்ன வேலை என்றும், விவசாயிகள் போராட்டம் காலிஸ்தான் போராட்டமாகியதாக 0.51 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
டெல்லியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பேரணி நடத்தியதாக வைரலாகும் வீடியோவில் இடம்பெற்ற பகுதி இந்தியாவைப் போன்றோ மற்றும் போராட்டக் களத்தை போன்றோ இல்லை. அவ்வீடியோ குறித்து தேடுகையில், 2018 ஜூலை 11-ம் தேதி Rohit Sardaa Fans Club எனும் முகநூல் பக்கத்தில் இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது.
அதேபோல், 2018-ல் பிற முகநூல் பக்கங்களிலும் இவ்வீடியோ வெளியாகி உள்ளதை காண முடிந்தது. பேரணியில் இருக்கும் சீக்கியர் அணிந்த டி-ஷர்டில் ” March for freedom khalistan ” என இடம்பெற்று இருக்கிறது.
” March for freedom khalistan ” எனும் கீ வார்த்தைகளை கொண்டு தேடிய போது, 2018-ம் ஆண்டு அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ பகுதியில் காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள் மேற்கொண்ட பேரணி என அறிய முடிந்தது.
மேலும் படிக்க : விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசங்களா ?
இதற்கு முன்பாக கூட, விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் வேண்டும் என்ற பதாகை மற்றும் காலிஸ்தான் ஜிந்தாபாத் எனும் கோசங்கள் உடன் சீக்கியர்கள் போராடியதாக வதந்தியை பரப்பி இருந்தனர்.
மேலும் படிக்க : டெல்லியில் காலிஸ்தான் கேட்கும் சீக்கியர் புகைப்படம் எடுக்கப்பட்டதாக வதந்தி!
விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர்கள் மற்றும் முஸ்லீம் மீது குறி வைத்து வதந்திகள் பரப்புவதை நாம் தொடர்ந்து வெளியிடும் கட்டுரை வாயிலாக அறியலாம்.
முடிவு :
நம் தேடலில், டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் ஆதரவு பேரணி நடைபெற்றதாக வைரல் செய்யப்படும் 0.51 நொடிகள் வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ பகுதியில் நடைபெற்ற பேரணி என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.