விவசாயிகள் போராட்டத்தில் இலவசமாக மது விநியோகம் எனப் பரப்பப்படும் வதந்தி !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
” பாத்திரம், பிளாஸ்டிக் டம்பளரை நீட்டுபவர்களுக்கு காருக்குள் இருக்கும் நபர் மதுவை ஊற்றும் ” 31 நொடிகள் கொண்ட வீடியோ விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக மது வழங்குவதாகக் கூறி இந்திய அளவில் சமூக வலைதளத்தில் வைரல் செய்து வருவதை பார்க்க முடிந்தது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவை Invid tool மூலம் கீஃப்ரேம்களாக பிரித்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2020 ஏப்ரல் 12-ம் தேதி பொது முடக்கத்தின் போது எடுக்கப்பட்டதாக இவ்வீடியோ யூடியூப் சேனல் ஒன்றில் வெளியாகி இருக்கிறது.
2020 செப்டம்பர் 17-ம் தேதி மற்றும் 20-ம் தேதியே மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், வைரல் செய்யப்படும் வீடியோ வேளாண் சட்டங்களின் மசோதா தாக்கல் செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்பே பதிவாகி இருக்கிறது.
காரில் இருக்கும் நபர் மதுவை அளிக்கும் வைரல் வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. ஆனால், தற்போது நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கும் இதற்கு தொடர்பில்லை எனத் தெளிவாய் தெரிகிறது.
மேலும் படிக்க : விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர் வேடத்தில் கலந்து கொண்ட இஸ்லாமியரா ?
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பல்வேறு வதந்திகள், தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் சுற்றி வருகின்றன. அவ்வாறான வதந்திகள் குறித்து நாம் தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம்.
மேலும் படிக்க : விவசாயிகள் போராட்டத்தில் வைரலாகும் கார் மதிப்பு ரூ.2 கோடியா ?
முடிவு :
நம் தேடலில், விவசாயிகள் போராட்டத்தில் இலவசமாக மது வழங்கப்படுவதாக வைரலாகும் வீடியோ கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே கொரோனா பொது முடக்கத்தின் போது சமூக வலைதளங்களில் பதிவாகி இருக்கிறது. இதற்கும் விவசாயிகள் போராட்டத்திற்கும் தொடர்பில்லை என அறிய முடிகிறது.