விவசாயிகள் போராட்டத்தில் டர்பன் அணிந்த வந்த இஸ்லாமியர் என வதந்தி வீடியோ !

பரவிய செய்தி

விவசாய போராட்ட அக்கப்போருகள்! பிளாஸ்டிக் டர்பன் அணிந்து சிக்கிய குல்லா !

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

புதிய விவசாயச் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டங்களையும், பேரணிகளையும் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து விவசாயிகள் கூட்டம் கூட்டமாய் தலைநகர் டெல்லியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றனர். எனினும், போராட்டத்திற்கு செல்லும் விவசாயிகள் மீது டெல்லி போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மூலம் கூட்டத்தை கலைப்பது, செல்லவிடாமல் தடுத்து வருகின்றனர். நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசத் துவங்கி உள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தின் அக்கப்போரு, சீக்கியர் போல் டர்பன் அணிந்து போலீசார் மீது கல் எறிந்த இஸ்லாமிய நபர் என டர்பனை கழட்டி ஒருவரை போலீசார் அழைத்து செல்லும் 13 நொடிகள் கொண்ட வீடியோ வைரல் செய்ய்யப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

சீக்கியர் போல் பிளாஸ்டிக் டர்பன் அணிந்த இஸ்லாமியர் என வைரல் செய்யப்படும் வீடியோ விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது அல்ல. இதற்கு முன்பாக, கடந்த ஆண்டு குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நிகழ்ந்த போதும் கூட ” சீக்கியர் போல் டர்பன் அணிந்து சிக்கிய இஸ்லாமியர் ” என இதே வீடியோவை இந்திய அளவில் வைரல் செய்து இருந்தனர்.

வைரல் செய்யப்படும் வீடியோவில் இருப்பவர் இஸ்லாமியர் அல்ல, சீக்கியரே என்றும், இந்த வீடியோ 9 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப்பில் நிகழ்ந்த சம்பவம் என ஆதாரத்துடன் நாம் ஃபேக்ட் செக் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

விரிவாக படிக்க : சிங் போல் தலைப்பாகை அணிந்து போராடிய இஸ்லாமியர் கைதா ?

2011-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில், பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலியில் உள்ள பிசிஏ மைதானத்தின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கால்நடை மருந்தாளுனருக்கும், பஞ்சாப் போலீசுக்கும் இடையே நடத்த சம்பவம் என வைரலாகும் வீடியோ உடன் வெளியாகி இருந்தது.

விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும், போராட்டம் குறித்த தவறான நோக்கத்தை உருவாக்க வேண்டுமென்றே தவறான மற்றும் பழைய வீடியோக்களை வைரல் செய்து வருகின்றனர்.

முடிவு : 

நம் தேடலில், விவசாயிகள் போராட்டத்தில் பிளாஸ்டிக் டர்பன் அணிந்து சீக்கியர் போல் வந்த இஸ்லாமியரை போலீசார் கைது செய்த காட்சி என வைரல் செய்யப்படும் வீடியோ வேண்டுமென்றே தவறாக பரப்பப்படும் ஒன்று என்றும், அந்த வீடியோ 2011-ம் ஆண்டில் பஞ்சாப் போராட்டத்தில் போலீசார் சீக்கிய இளைஞரின் டர்பனை கழட்டிய காட்சி என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button