டெல்லியில் காலிஸ்தான் கேட்கும் சீக்கியர் புகைப்படம் எடுக்கப்பட்டதாக வதந்தி!

பரவிய செய்தி
Farmers , விவசாயிகள் போராட்டம் இப்போ எங்கே போய் நிக்குது பாருங்க , இவர்களுக்கு Funding அதே புது தில்லி சிஎஎ போராட்ட குழுக்களுக்கு பட்டுவாடா பண்ண அதே குள்ளநரி கூட்டம் தான்..
மதிப்பீடு
விளக்கம்
Ranjithkumar Mavilayi எனும் முகநூல் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட சீக்கியர்கள் ” காலிஸ்தான் வேண்டும் ” என்கிற பதாகை உடன் போராடியதாக இப்புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். மேலும், சில முகநூல் குழுக்களில் அப்பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
” We Want Khalistan ” எனும் வாசகத்துடன் கூடிய பதாகையை ஏந்தி இருக்கும் சீக்கியரின் புகைப்படத்தை ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்கையில், கடந்த 2018-ம் ஆண்டில் இருந்தே இப்புகைப்படம் சமூக வலைதளங்களில், ஊடகச் செய்திகளில் கோப்பு படமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
” sikh youth federation bhindranwala ” அமைப்பைச் சேர்ந்தவர்கள் அமிர்தசரசில் போராடிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் எனக் கூறப்படுகிறது. பதாகையிலும் அந்த அமைப்பின் பெயர் இடம்பெற்று இருக்கிறது. எனினும், இந்த புகைப்படம் எப்போது, எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என விரிவான தகவல் கிடைக்கவில்லை.
மேலும் படிக்க : வயதான விவசாயி தாக்கப்படவில்லையா ?| உண்மைத்தன்மை எனப் பரப்பப்படும் பொய் பிரச்சாரம்!
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இணையத்தில் இருக்கும் புகைப்படத்தை எடுத்து டெல்லி போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வதந்தியைப் பரப்பி வருகின்றனர். டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் மற்றும் பழைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்படுகின்றன.
மேலும் படிக்க : டெல்லி விவசாயிகள் போராட்டமெனப் பரப்பப்படும் பழைய புகைப்படங்களின் தொகுப்பு !
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.