2035-ல் அதிவேக வளர்ச்சி அடையும் 20 நகரங்களில் 17 இந்திய நகரங்கள் – Oxford economics

பரவிய செய்தி

2035-ல் உலகின் அதிவேக வளர்ச்சி அடையும் 20 நகரங்களில் 17 நகரங்கள் இந்தியாவில் இருந்து இருக்கும். அதில், சென்னை, திருச்சி, திருப்பூர் அடங்கும்- டைம்ஸ் ஆப் இந்தியா.

மதிப்பீடு

சுருக்கம்

Oxford Economics வெளியிட்ட அறிக்கையின்படி, 2019-2035க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் GDP வளர்ச்சியின் அடிப்படையில் இந்திய நகரங்கள் சர்வதேச அளவில் அதிவேக வளர்ச்சி அடையும் நகரங்களின் பட்டியலில் இருக்கும் என கணிக்கப்படுகிறது. இதில், 20 நகரங்களில் 17 முக்கிய நகரங்கள் இந்தியாவில் இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

விளக்கம்

இந்தியாவின் முக்கிய நகரங்களை சார்ந்து நாட்டின் வளர்ச்சி அமைந்து இருக்கிறது. உலகளவில் அதிவேகமாக வளர்ச்சி அடையும் நகரங்கள் பற்றிய முன் கணிப்பு அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியாகி இந்திய செய்தி தளங்களிலும் பதிவாகி உள்ளது.

Advertisement

Oxford Economics-ன் சர்வதேச நகரங்களின் ஆராய்ச்சி பிரிவின் தலைவர் ரிச்சர்ட் ஹோல்ட் அறிக்கையின்படி, “ எதிர்கால GDP( Gross Domestic product) வளர்ச்சி விகிதத்தை ஒப்பிடுவது மிகவும் கடினமானது. இருப்பினும், 2019-2035 இடைப்பட்ட ஆண்டுகளில் அதிவேக வளர்ச்சி அடையும் சர்வதேச 20 நகரங்களில் பெங்களூர், ஹைதpராபாத், சென்னை உள்ளிட்ட வலிமையான 17  நகரங்கள் இடம்பெறலாம் “ என குறிப்பிட்டுள்ளனர்.

முன்பே கணிக்கப்பட்ட 17 நகரங்களில் முதல் 10 நகரங்களை அவற்றின் GDP வளர்ச்சி அடிப்படையில் வகைப்படுத்தி உள்ளனர். இதில், சூரத் நகரம் 9.2% GDP-ஐ கொண்டு பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் எனக் கூறியுள்ளனர். வட இந்தியாவில் வைர வணிகம், ஜவுளித் தொழில், தொழில்நுட்ப துறையிலும் சிறந்து விளங்கும் சூரத் நகரம் முதலிடத்தில் இருக்கிறது.

இதையடுத்து, ஆக்ரா, பெங்களூர், ஹைத்ராபாத், நாக்பூர், திருப்பூர், ராஜ்கோட், திருச்சிராப்பள்ளி, சென்னை, விஜயவாடா முதலிய நகரங்கள் வரிசையாக பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

திருப்பூர்(8.3%), திருச்சிராப்பள்ளி(8.2%), சென்னை (8.2%) GDP ஆக இருக்கும் என கணித்து உள்ளனர். பட்டியலில் இடம்பெற்ற நகரங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) தங்களின் வளர்ச்சியை அதிகவேகத்தில் கொண்டு செல்லும் என முன் கணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

முன் கணிப்பின் படி, “ 2027-ல் முதல் முறையாக அனைத்து ஆசிய நகரங்களின் GDP மதிப்பீடு வடக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நகரங்களின் GDP-ஐ விட அதிகரிக்கும் “ என குறிப்பிட்டுள்ளனர்.

2035-ல் மிகப்பெரிய நிதி மற்றும் வணிக சேவைத்துறையில் நியூயார்க் நகரம் முதன்மையானதாக இருக்கும். இதையடுத்து, டோக்யோ, லாஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் நான்காம் இடத்தில் ஷாங்காய் உடன் லண்டன் இணைந்து இருக்கும் என அறிக்கையில் உள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்திய நகரங்கள் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சியை காணும் பொழுது அதிவேக வளர்ச்சி அடைந்த நகரங்களாக மாறும். இதில், மூன்று தமிழக நகரங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button