கத்தார் உலகக் கோப்பை நிகழ்ச்சியில் ஜாகிர் நாயக் 4 பேரை மதம் மாற்றியதாக பரவும் பழைய வீடியோ !

பரவிய செய்தி

FIFA உலகக் கிண்ண ஆரம்ப நிகழ்வில் ஷாகிர் நாயக்கின் உரையை கேட்ட 4 பேர் இஸ்லாத்தை தழுவினர்..!

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகரான ஜாகிர் நாயக் மீது பண மோசடி மற்றும் வெறுப்பு பேச்சு முதலான குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே அவர் இந்தியாவில் பிரசங்கம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

அவரது தொலைக்காட்சி பங்களாதேசில் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்து மற்றும் கனடாவில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

கத்தாரில் நடைபெறும் FIFA கால்பந்து உலகக் கோப்பை போட்டியின் முதல் நிகழ்வில் ஜாகிர் நாயக் 4 பேரை இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார் என 30 வினாடி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதேபோல உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்னதாக 588 பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாகப் பதிவுகள் பரவுகின்றது.

உண்மை என்ன ?

FIFA – 2022 உலகக் கோப்பை போட்டி, கத்தார் நாட்டில் கடந்த 20ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்வு குறித்து பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் காண முடிந்தது. அதில், ஜாகிர் நாயக் கத்தாருக்கு வந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து விமர்சனங்களையும் பெற்றது.   

Advertisement

Twitter link 

FIFA நிகழ்ச்சி குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் உள்ளன. ஆனால், ஜாகிர் நாயக் 4 நபர்களை இஸ்லாத்திற்கு மதம் மாற்றியதாகப் பரவும் வீடியோ FIFA தொடக்க விழா கேலரியில் இல்லை. 

பரவக்கூடிய வீடியோவை ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து தேடினோம். 2016ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி ஜாபர் அல்ஹர்மி என்பவர் அவ்வீடியோவை டிவீட் செய்துள்ளார். அதில், “கடாராவில் டாக்டர்.ஜாகிர் நாயக்கின் விரிவுரைக்குப் பிறகு 4 பேர் இஸ்லாமிற்கு மாறினார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜாகிர் நாயக்கின் நிகழ்வு 2016, மே 26ம் தேதி நடைபெற உள்ளதாக கடாராவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அவ்வாண்டு மே மாதம் 18ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட வீடியோவையே FIFAவில் எடுக்கப்பட்டதாக தற்போது பரப்புகின்றனர். இதன் 5 நிமிட வீடியோ Aljazeera Mubasher Channel‎ என்ற பேஸ்புக் பக்கத்தில் காண முடிகிறது.

கத்தாரில் ஜாகிர் நாயக் 4 பேரை இஸ்லாமிற்கு மதம் மாற்றிய காட்சி எனத் தலைப்பிட்டு “இந்தியா டுடே” செய்தி வெளியிட்டு இருந்தது. தற்போது, அந்த கட்டுரையின் தலைப்பு ‘Qatar invites Zakir Naik to preach Islam amid FIFA World Cup’ என மாற்றி உள்ளது.

முடிவு : 

நம் தேடலில், ஜாகிர் நாயக் 4 பேரை 2022 FIFA உலகக் கோப்பை நிகழ்ச்சியில் மதம் மாற்றியதாகப் பரவும் வீடியோ தவறானது. அது கடந்த 2016ம் ஆண்டு கடாராவில் நடைபெற்ற நிகழ்ச்சி என்பதை அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button