சவுதி அரேபியா அரசு கால்பந்து வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு அளிப்பதாக பரவிய தவறான செய்தி !

பரவிய செய்தி

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவுடனான வெற்றியைக் கொண்டாடும் விதமாகச் சவுதி அரேபிய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவிப்பு.

Facebook link

மதிப்பீடு

விளக்கம்

FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சவுதி அரேபியா அணி அர்ஜென்டினாவை  வீழ்த்தியது. இதனைக் கொண்டாடும் விதமாகச் சவுதி அரேபிய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாக உலக அளவில் செய்திகள் வைரலாகின. இது குறித்து விகடன், சன் நியூஸ், பாலிமர், புதியதலைமுறை உள்ளிட்டவையும் நியூஸ் கார்டுகள் வெளியிட்டுள்ளன. 

Facebook link

Facebook link

Facebook link 

உண்மை என்ன ? 

FIFA உலகக் கோப்பை போட்டி 2022, நவம்பர் 20ம் தேதி கத்தாரில் தொடங்கிய நடைபெற்று வருகிறது. அர்ஜென்டினாவுக்கும் சவுதி அரேபியாவுற்கும் இடையே கத்தாரில் உள்ள Lusail மைதானத்தில் நவம்பர் 22ம் தேதி கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் சவுதி அரேபியா அணி வெற்றி பெற்றது. 

FIFA உலகக் கோப்பை போட்டியில் அர்ஜென்டினாவை சவுதி அரேபியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாகச் சவுதி அரேபியப் பிரதமர் அந்நாட்டிற்கு பொது விடுமுறை அறிவித்தார்.

இந்நிலையில் சவுதி அரேபிய அரசு அந்நாட்டு வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரினை பரிசாக அளிப்பதாக வெளியான செய்தி குறித்து இணையத்தில் தேடினோம்.

சவுதி அரேபியா அரசு காரினை பரிசாக வழங்குவது குறித்து டைம்ஸ் நவ், NDTV, இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. பிறகு அச்செய்திகளை நீக்கியுள்ளது. 

Arab News நவம்பர் 26ம் தேதி “Saudi national team footballer refutes Rolls-Royce prize rumors” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அத்தேதியில் சலே அல்-ஷெஹ்ரி (Saleh Alshehri) என்ற சவுதி அரேபிய கால்பந்து வீரர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் சொகுசு கார் பரிசு வழங்குவது குறித்து கேள்வி எழுப்பினார். அந்த செய்தி உண்மை அல்ல. நாட்டிற்குச் சேவை செய்வதே எங்களுக்கான ஒரே வெகுமதி” என சலே அல்-ஷெஹ்ரி பதில் அளித்துள்ளார். 

முன்னதாக நவம்பர் 22ம் தேதி, பாகிஸ்தானைச் சேர்ந்த Awab Alvi என்பவர் செய்த ட்வீட் பதிவில்,  ” சவுதி அரேபிய அரசு தனது கால்பந்தாட்ட வீரர் ஒவ்வொருவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் காரினை பரிசாக வழங்க உள்ளது எனக் குறிப்பிட்டு இருந்தார். அப்பதிவிலேயே இது உறுதியான தகவலா என ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு Awab Alvi சிரிப்பது போல இமோஜ் செய்துள்ளார். இதிலிருந்து இவர் விளையாட்டாகச் செய்துள்ளது உறுதியாகிறது.

இதன் பிறகு, சொகுசு கார் பரிசு என்பது ஒரு தவறான தகவல் என NDTV, டைம்ஸ் நவ் ஆகியவை செய்தி வெளியிட்டுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், FIFA உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் சவுதி அரேபியா அணி அர்ஜென்டினாவை வெற்றி பெற்றதை தொடர்ந்து, கால்பந்து வீரர்களுக்கு அந்நாட்டு அரசு ரோல்ஸ் ராய்ஸ் காரினை பரிசாக அளிக்கவுள்ளது என்ற செய்தி தவறானது என்பதை அறிய முடிகிறது.

சவுதி அரேபியா அரசு அத்தகைய அறிவிப்பு எதுவும் அறிவிக்கவில்லை எனக் கால்பந்தாட்ட வீரர் சலே அல்-ஷெஹ்ரி தெரிவித்துள்ளார்.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader