This article is from Aug 30, 2019

கடமையை சரிவர செய்யாமல் தாமதிக்கும் காவல் அதிகாரிக்கும் அபராதமா ?

பரவிய செய்தி

20 நாட்களுக்குள் பாஸ்போர்ட் சரிபார்க்காமல் இருத்தல், புகார் கொடுத்தவுடன் FIR தராமல் இருத்தல், பறிமுதல் செய்த இருசக்கர வாகனத்தை 3 நாட்களுக்குள் உரியவரிடம் தராமல் இருத்தல் போன்ற கடமையை சரிவர செய்யமல் காலம் தாழ்த்தும் போலீசார்களுக்கு ரூ.5000 அல்லது தினமும் ரூ250 அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

காவல்துறை மட்டுமின்றி மக்களுக்கு சேவை வழங்கக்கூடிய அனைத்து அரசு அதிகாரிகள் காலம் தாழ்ந்து சேவையை வழங்கும் பட்சத்தில் ரூ250 முதல் ரூ5000 வரை அபராதம் விதிக்கும் முறையை ” Right To Service Act ” எடுத்துரைக்கிறது.

விளக்கம்

க்களுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கே அபராதம் விதிக்கும் முறை உள்ளதாக சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஓர் தகவலை காண நேரிட்டது. காவல்துறை அதிகாரிகள் பணியினை சரிவர செய்யவில்லை என்றால் அபராதம் விதிக்கும் முறை எங்கு, எப்பொழுது தொடங்கப்பட்டது குறித்து தேடினோம்.

இதையடுத்து, 2017 ஏப்ரல் மாதம் டைம்ஸ் ஆப் இந்தியாவின் இணையதளத்தில் ” Cops may be fined Rs 250 a day or Rs 5,000 for failing to deliver ” என்ற தலைப்பில் வெளியான செய்தி கிடைத்தது. அதில், 20 நாட்களுக்குள் உங்களின் பாஸ்போர்ட் சரிபார்த்தல் வேலையை செய்யவில்லை என்றால், புகார் அளித்த நாளில் முதல் தகவல் அறிக்கையின் நகலை தராமல் இருந்தால், பறிமுதல் செய்த உங்கள் இருசக்கர வாகனத்தை 3 நாட்களுக்குள் ஒப்படைக்கவில்லை போன்ற பணியை சரிவர செய்யாமல் காலம் தாழ்த்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு ரூ.5000 அல்லது நாளொன்றுக்கு ரூ250 அபராதமாக விதிக்கப்படும்.

போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ள அபராதம் விதிக்கும் முறையால், காவல் அதிகாரிகளின் நல்ல நடைமுறைகள், சேவையில் பொறுப்புடைமை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுடன் மக்களுக்கான சிறந்த சேவையை அளிக்க ஏற்படுத்தி இருப்பதாக செய்தியில் வெளியாகி இருந்தது.

பாஸ்போர்ட் சரிபார்த்தல், ஓட்டுனர் உரிமம் சார்ந்த பிரச்சனைகள், இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சான்றிதழ்கள், பிரேதப் பரிசோதனை அறிக்கை, போராட்டத்திற்கான என்ஓசி உள்ளிட்ட 45 சேவைகள் காவல்துறையின் பொது விநியோக சேவையில் அடங்கி உள்ளது.

இத்தகைய சேவைகளை காவல் நிலைய அதிகாரிகள் செய்யத் தவறினாலோ அல்லது காலம் தாழ்த்தி நடந்து கொண்டாலோ அபராதமாக ரூ5000 அல்லது தினந்தோறும் ரூ250 விதிக்கப்படும் என போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக 2017-ல் செய்திகளில் வெளியாகி இருக்கிறது. ஒருவேளை, மக்கள் தங்களுக்கு தேவையான சேவைகளை பெற முடியாத நேரத்தில் அதிகாரிகள் குறித்து புகார் அளிப்பதற்கு முன்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

அரசு சேவைகள் :

2015 ஜனவரியில் மகாராஷ்டிராவில் அரசு அதிகாரிகள் மக்களுக்கான சேவையை சரியான நேரத்திற்குள் அளிக்கவில்லை என்றால் ரூ5,000 வரையிலான அபராதத்தை விதிக்கும் ” Right to Services Act ” என்ற சட்ட வரைவு மகாராஷ்டிரா பொது நிர்வாகத்துறையின் கீழ் உருவாக்கி உள்ளதாக செய்தியில் வெளியாகி உள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட சேவைகளில் அரசு அதிகாரிகள் காலம் தாழ்த்தினால் ரூ500 முதல் ரூ5000 வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டது.

Right To Service Act ” -ஐ மகாராஷ்டிரா மாநிலம் மட்டுமல்லாமல் இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் அமல்படுத்தி இருப்பதாக 2015 அக்டோபர் மாதத்தில் செய்திகளில் வெளியாகி இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களில் இந்த சட்டத்தை அமல்படுத்த தயக்கம் காட்டி வருவதாக கூறப்பட்டுள்ளது.

பொது சேவை உரிமைச் சட்டத்தை இயற்ற எந்த சட்டத்தையும் கொண்டு வரப்போவதில்லை என்று தமிழக அரசு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததாக 2015 ஏப்ரல் 20-ம் தேதி செய்தியில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் ” Right to service ” சட்டம் கொண்டு வரப்படவில்லை.

” 2015-க்கு பிறகு ” Right to service Act ” குறித்தும், 2017-க்கு பிறகு காவல் அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பது குறித்தும் செய்திகள் ஏதுமில்லை”.

காவல் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மக்களுக்கு வழங்கக்கூடிய சேவைக்கு குறிப்பிட்ட கால நிர்ணயம் வைத்து , அதனை வழங்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கும் முறையை செயல்படுத்துவது சிறப்பான நோக்கமே. ஆனால், அது எந்த அளவிற்கு மக்களிடம் சென்று சேர்ந்து உள்ளது , இன்றும் அபராதம் விதிக்கும் முறை நடைமுறையில் இருக்கிறதா என்பது கேள்விக்குறியே ?

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader