இந்தியாவில் குடியேறிய முதல் மனிதனின் வாரிசு மதுரையில் கண்டுபிடிப்பு !

பரவிய செய்தி

ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த முதல் மனிதனின் 70,000 வருடங்கள் மிக பழமையான M130 ஜீன் ரகம் மதுரையைச் சேர்ந்த ஒரு குடும்பத்திடம் கண்டறியப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மரபியலாளர்களின் ஆராய்ச்சியில், மதுரை அருகே உள்ள கிராமத்தில் 13 பேரின் டி.என்.ஏ-வில் M130 ஜீன் ரகம் இருப்பதை கண்டறிந்து உள்ளனர். மேலும், இவர்களின் முன்னோர்கள் முதல் இந்தியன் என ஆராய்ச்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்து இருந்தனர்.

விளக்கம்

இன்று இந்தியா பல இன குழுக்கள் ஒருங்கிணைந்த தேசமாக விளங்குகிறது. சில தருணங்களில் இந்தியாவில் முதலில் குடியேறியவர்கள் யார், எங்கிருந்து வந்தனர் என விவாதங்களும் எழும். இந்நிலையில், ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவில் முதலில் குடியேறியவரின் வாரிசு உடைய ஜீன் கண்டறியப்பட்டு உள்ளதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement

ஆய்வு :

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இமுன்னோஜி(Immunology) துறையின் ஓய்வுப்பெற்ற பேராசிரியர் ராமசாமி பிச்சப்பன் 2001-ம் ஆண்டில், ஆப்பிரிக்காவில் இருந்து 70,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய மனிதனின் M130 ரக ஜீனை கண்டறிந்தார். இந்த ஆய்வு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஒன்றிணைந்த ஆய்வின் பகுதியாக ஆய்வு இருந்துள்ளது.

மதுரைக்கு அருகே உள்ள ஜோதிமாணிக்கம் எனும் கிராமத்தில் உள்ள   விருமாண்டி என்பவரிடம் M130 ரக ஜீன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ” என்னுடைய ஆராய்ச்சி செயல்முறையில், விருமாண்டி உடைய ஜீன் ஆப்பிரிக்கா உடன் நேரடியாக பொருந்தி உள்ளது ” என 2001-ம் ஆண்டு தம் ஆய்வு முடிவில் பச்சயப்பன் தெரிவித்து இருந்தார். தன்னுடைய ஆய்வானது ” Nature Genetics ” இல் வெளியிடப்பட்டது.

முதல் இந்தியன் :

” இந்தியாவில் M130 ஜீனை தவிர பழமையான குறியீடு வேறேதுமில்லை. இந்த வழியில், ஆப்பிரிக்காவில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறிய முதல் மனிதனை அடையாளம் காண முடியும்.ஏனெனில், பிறகு குடியேறியவர்கள் இந்த ஜீன் குறியீட்டை கொண்டிருக்கவில்லை. இதுவே முதல் ” இந்தியன் ” என்பதற்கான ஆதாரம் ” என பேராசிரியர் பச்சயப்பன் தெரிவித்து இருந்தார்.

Advertisement

2001-ம் ஆண்டில் கண்டுபிக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் 2003-ல் மதிப்புமிக்க பத்திரிகையான ” Nature Genetics ” இல் வெளியாகியது. 2008-ல் பச்சயப்பன் உடைய ஆய்வு குறித்த செய்திகள் இந்திய செய்தித்தளங்களில் வெளியாகி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு வெளியான செய்தி தற்பொழுது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும், இந்த ஆராய்ச்சி பற்றி டிஸ்கவரி சேனலில் ” தி ஸ்டோரி ஆஃப் இந்தியா ” எனும் நிகழ்ச்சி தொகுப்பில் வெளியாகியதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டு உள்ளார்.

முடிவு :

பழமையான M130 ரக ஜீன் மதுரை அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும்  விருமாண்டி உடைய டி.என்.ஏ-வில் கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. விருமாண்டி உடன் மொத்தம் 13 பேரை பேராசிரியர் பச்சயப்பன் குழுவின் ஆராய்ச்சி குழு கண்டறிந்து உள்ளனர்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button