இவ்வகையான மீன்களை உண்பதால் உடலுக்கு பாதிப்பு வருமா?

பரவிய செய்தி

மீன்களில் இது போன்ற முட்டைகள் தென்பட்டால் அது மீனின் முட்டைகள் என்று எண்ணி உண்ண வேண்டாம். இவை Gulgea என்ற ஒரு வகை ஒட்டுண்ணியால் ஏற்படும் விளைவு ஆகும். இதை உண்பதால் உடலுக்கு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இவ்வகை மீன்களை தவிர்ப்பது நல்லது.

மதிப்பீடு

சுருக்கம்

Gulgea என்ற ஒரு வகை ஒட்டுண்ணிகள் மீன்களின் உடலில் செல்களை தோற்றுவிக்கின்றன. இவை அரிய மற்றும் ஆபத்தான நோய்கள் ஒன்றும் இல்லை. இவ்வாறு, மீன்களில் முட்டைகள் போன்று காணப்பட்டால் அவற்றை நன்றாக கழுவி சுத்தம் செய்து சமைத்து உண்ணலாம்.

விளக்கம்

அனைவராலும் அதிகம் விரும்பி உண்ணப்படும் “ மத்தி மீன் ” யாரும் அரியாத ஒருவகை தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. மத்தி மீனின் வயிற்றுப் பகுதியில் முட்டைகள் போன்ற காணப்படுவது மீனின் முட்டைகள் அல்ல. இவை ஒரு வகை ஒட்டுண்ணியால் உண்டாகும் விளைவு ஆகும். எனவே இவ்வகை மீன்களை உண்பதை தவிர்க்கவும். விரைவாக அனைவருக்கும் பகிருங்கள் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வாட்ஸ்அப் , முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் இச்செய்திகள் வைரலாகி வந்தன.

Advertisement

மஸ்கட் நாட்டில் உள்ள ஒருவரால் இச்செய்தியானது பரப்பப்பட்டுள்ளது. அந்த செய்திகளில் காண்பிக்கப்பட்ட படத்தில் மீனின் வயிற்றுப் பகுதியை வெட்டிப் பார்க்கும் பொழுது முட்டைகள் போன்று இருக்கின்றன. இவை Gulgea என்ற ஒரு வகை ஒட்டுண்ணியால் உண்டாக்கப்படுபவை ஆகும். Gulgea ஒட்டுண்ணி தன்னை சுற்றி கோளவடிவில் செல்களால் பாதுகாப்பு கேடயம் போன்று உருவாகும் திறன் உடையவை.

இந்த முட்டைகள் மீனின் உட்புறத்தில் காணப்படுகின்றன. இவற்றின் அறிவியல் பெயர் Gulgea Sardinellensis ஆகும். இவை அரிதானவை அல்ல, இவை பார்ப்பதற்கு முட்டைகள் அல்லது படிகங்கள் போன்று காட்சியளிக்கும். மேலும், இவை 1-16 mm அளவிற்கு வளர்ச்சி அடைவதோடு அதிகமாக பரவும் தன்மையும் கொண்டது. இதன் பெருக்கத்தை Xenoma என்று அழைப்பர்.

இவ்வாறு மீன்களில் காணப்படும் முட்டைகள் பார்ப்பதற்கு அருவருப்பான ஒன்றாகவும், பரவிய செய்தியாலும், பலரும் உடலிற்கு தீங்கு என்று நினைத்து தவிர்த்து வருகின்றனர். ஆனால், அத்தகைய மீன்களை உண்பதால் உடலுக்கு எந்த ஒரு பாதிப்பும் உண்டாகாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எனினும், மீனில் காணப்படும் முட்டைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து சமைத்து உண்ணவும். மேலும், இது போன்ற வதந்திகளை நம்பி மீன்களை உண்பதை நிறுத்த வேண்டாம் என்று அறிவித்துள்ளனர்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Advertisement

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button