லிபியாவை தாக்கிய புயல் என எடிட் செய்யப்பட்ட பழைய வீடியோவை வெளியிட்ட புதிய தலைமுறை !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த மொராக்கோ நாட்டில் கடந்த செப்டம்பர் 08 அன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக பலி எண்ணிக்கை 2900-ஐ தாண்டிய நிலையில், தற்போது லிபியா நாட்டிலும் வெள்ளப்பெருக்கில் சிக்கில் பலியானவர்களின் எண்ணிக்கை 20,000 வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் லிபியா நாட்டில் ஏற்பட்ட டேனியல் புயல் காரணமாக ஏற்பட்ட சேதம் என்று கூறி வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை புதியதலைமுறை ஊடகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில் பரப்பி வருகின்றனர்.
#Libiya #DanielStrome
பிணங்கள் சூழ்ந்த நகரமாக மாறியது லிபியா….லிபியாவில் ஏற்பட்ட டேனியல் புயலால் டெர்னா மலைப்பகுதியில் இருந்த இரண்டு அணைகள் உடைந்து நகருக்குள் புகுந்த வெள்ளத்தில் 2000 க்கும் அதிகமான நபர்கள் பலியாகி உள்ளனர் எனவும் இந்த எண்ணிக்கை 10,000த்தை நெருங்கும் என்றும்… pic.twitter.com/MrUq2IJw9F
— தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) September 12, 2023
It’s not from a movie , it’s Libya yesterday💔
May Allah save our brothers and sisters in Libya 😢💔 pic.twitter.com/pdiQzkhvZ7— Ask A Muslim (@Qamuslim) September 14, 2023
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோவில் தோன்றும் சூறாவளி (Tornado) காட்சிகள் எடிட் செய்யப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.
மேலும் பரவி வரும் வீடியோவின் உண்மையான வீடியோவை Adobe Stock மற்றும் Shutterstock போன்ற இணையதளங்களிலும் காண முடிந்தது. அவற்றில் சூறாவளி காட்சிகள் எதுவும் இடைபெறவில்லை.
இந்த வீடியோ லிபியா நாட்டில் தான் எடுக்கப்பட்டதா என்பது குறித்து மேலும் தேடினோம். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஏற்பட்ட புயலின் போது பதிவு செய்த வீடியோ என்பது குறித்து Tornado Trackers தன்னுடைய அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் கடந்த 2016 அக்டோபர் 09 அன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த 2016-இல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஏற்பட்ட புயலின் போது எடுக்கப்பட்ட வீடியோவை, பின்புறம் சூறாவளி காட்சிகளுடன் மின்னல் ஏற்படுவது போன்று எடிட் செய்து லிபியா நாட்டின் டெர்னா நகரில் ஏற்பட்ட புயலின் போது எடுக்கப்பட்டதாகக் கூறி சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க: சந்திரயான்-3 அனுப்பிய நிலவின் மேற்பரப்பு காட்சிகள் எனப் பரவும் 3D அனிமேஷன் வீடியோ !
மேலும் படிக்க: டிராகன் போன்று பறக்கும் விமானத்தின் புதிய வடிவமைப்பு எனப் பரவும் அனிமேஷன் வீடியோ !
முடிவு:
நம் தேடலில், லிபியா நாட்டில் ஏற்பட்ட புயல் என்று கூறி புதியதலைமுறை வெளியிட்ட வீடியோ லிபியா நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல என்பதையும், இது 2016-இல் அமெரிக்கா நாட்டின் புளோரிடா மாகாணத்தில் ஏற்பட்ட புயல் காட்சிகளின் எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.