உணவு பாக்கெட்டில் வைரசைப் பரப்புவதாக வைரலாகும் வீடியோ ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

உணவு பாக்கெட்டில் வாயால் ஊதி கொரோனா வைரசை பரப்புகிறார்கள்.

மதிப்பீடு

விளக்கம்

கோவிட்-19 நோய்த்தொற்று உலகளாவிய பெரும் பாதிப்பாக கருதி வரும் வேளையில் இந்தியாவில் நோவல் கொரோனா வைரசை மதம் சார்ந்த ஒன்றாகவும், குறிப்பிட்ட மதத்தால் பரப்பப்படுவதாகவும் தவறான வீடியோக்கள், தகவல்கள் வதந்திகளாய் சமூக வலைதளங்களில் குவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், உணவகத்தில் தலையில் குல்லா அணிந்து இருக்கும் முஸ்லீம் ஊழியர் உணவு பார்சல் செய்யும் பொழுது திரும்பி கொண்டு ஒரு பாக்கெட்டில் வாயால் ஊதி கட்டும் காட்சிகள் அடங்கிய 44 விநாடிகள் கொண்ட வீடியோ இந்திய அளவில் வைரலாகியது. சிலர் இந்த வீடியோ தமிழகத்தில் எடுக்கப்பட்டது என்று பகிர்ந்து இருந்தார்கள். ஆகையால், இதன் உண்மைத்தன்மையை கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டது.

Advertisement

உண்மை என்ன ? 

வைரலாகும் வீடியோவில் இருந்து ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் அவ்வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டு அல்ல, 2019-ல் எடுக்கப்பட்டது என்று அறிய முடிந்தது. 2019 ஏப்ரல் 26-ம் தேதி cempedak cheese எனும் முகநூல் பக்கத்தில் இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது.

Facebook link | archived link 

3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்ற பதிவில் மலாய் மொழியில் மற்றும் சீன மொழியில் கமெண்ட்கள் உள்ளன. மேலும், 2019 ஏப்ரல் 26-ம் தேதியன்று இதே வீடியோ பிற முகநூல் பக்கத்திலும் வெளியாகி இருக்கிறது. இரண்டு முகநூல் பதிவிலும் papadum எனும் அப்பள உணவையே குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

Advertisement

Facebook link | archived link

உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான foodpanda உடைய ஸ்டிக்கர் வைரலாகும் வீடியோவில் இடம்பெற்று இருக்கிறது. ஆனால், அது பிங்க் நிறத்தில் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் foodpanda உடைய லோகோ ஸ்டிக்கர் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும், பிற ஆசிய நாடுகளில் பிங்க் நிறத்தில் ஸ்டிக்கர், உடை போன்றவை வழங்கப்படுகின்றன.

மேலும் படிக்க : முஸ்லீம்கள் தும்மல் மூலம் கொரோனாவை பரப்புவதாக வதந்தி வீடியோ !

இந்த வீடியோ எந்த நாட்டில் எடுக்கப்பட்டது, உணவு பாக்கெட்டில் வாயால் ஊதிய நபரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால், பழைய வீடியோவை வைத்து கொரோனா வைரஸ் உடன் வதந்தியை பரப்பி வருகிறார்கள் என்பது தெளிவாகிறது.

நம்முடைய தேடலில் இருந்து, 2019 ஏப்ரல் மாதத்தில் பிற ஆசிய நாட்டில் வைரலான வீடியோவே தற்போது இந்தியாவில் தவறாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த வீடியோவிற்கும் கொரோனா வைரசிற்கும் தொடர்பில்லை. மேலும், கொரோனா வைரசை முஸ்லீம்கள் பரப்புவதாக தவறான எண்ணத்துடன் இவ்வீடியோவை பரப்பி வருகிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
PHP Code Snippets Powered By : XYZScripts.com
Close
Close