சென்னை சாலை பணிகளில் வெளிநாட்டவர்கள்.. உண்மை என்ன ?

பரவிய செய்தி

தமிழ்நாடு வல்லரசு ஆயிடுச்சா நமக்கு தெரியாம?! சென்னைல வெள்ளைக்காரன் ரோடு வேலை பண்றான். (Near Cenatoph road taken at 9.30 today)

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

சென்னை நகரின் சாலைப் பணிகளில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருவதாக கீழ்காணும் வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. கிஷோர் கே சுவாமி என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” தமிழ்நாடு வல்லரசு ஆயிடுச்சா நமக்கு தெரியாம?! சென்னைல வெள்ளைக்காரன் ரோடு வேலை பண்றான். (Near Cenatoph road taken at 9.30 today) ” என 21 நொடிகள் கொண்ட வீடியோவை பதிவிட்டு இருந்தார்.

வீடியோவில், சென்னை செனடாப் சாலைப் பகுதியில் காரில் சென்றுக் கொண்டிருக்கும் போது, சாலையோரத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

உண்மை என்ன ? 

வீடியோ எடுக்கப்பட்ட பகுதி ” செனடாப் சாலை ” எனக் குறிப்பிட்டு இருந்ததால், யூடர்ன் தரப்பில் நேரடியாக அப்பகுதிக்கு சென்று பார்த்தோம். நேரில் சென்ற போது தான் தெரிந்தது, அவர்கள் சாலைப் பணியில் ஈடுபடவில்லை, சுற்றுச்சுவரை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ள முடிந்தது.

அங்கு பணியில் இருப்பவர்களிடம் பேசிய போது, ” அங்கிருந்தவர்கள் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்றும், தங்களுக்கு ரஷ்ய மொழியே தெரியும், ஆங்கிலம் தெரியாது எனத் தெரிவித்தனர். எனினும், ஒருவர் மட்டும் அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தில் ரஷ்ய தூதரகத்தின் (Russian consulate) பணிகளுக்காக வந்துள்ளதாக தெரிவித்து இருந்தார் “. பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு வீடியோ பதிவு வேண்டாம் எனத் தவிர்த்து விட்டனர்.

அவர்கள் பணி செய்த இடத்தில் நம்மால் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கட்டிடங்கள் உள்ள பகுதியின் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டு வருவதை பார்க்கலாம்.

மேலும், அவர்கள் சுற்றுச்சுவர் அமைப்பது தேனாம்பேட்டை செனடாப் சாலையில் அமைந்துள்ள ” ரஷ்யன் இல்லம் ” (Russian House) என அறிய முடிந்தது. ரஷ்யன் இல்லம் மற்றும் அதன் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெறுவதை புகைப்படங்களில் காணலாம்.

முடிவு : 

நம் தேடலில், சென்னையில் சாலை அமைக்கும் பணியில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருவதாகப் பரப்பப்படும் தகவல் தவறானது. பரப்பப்படும் வீடியோவில் இடம்பெற்றவர்கள் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள், அவர்கள் சென்னையில் உள்ள ரஷ்யன் இல்லத்தின் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader