கடன் கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கியது போல் உள்ளது திமுக பட்ஜெட் என ஜெயக்குமார் கூறினாரா ?

பரவிய செய்தி
கடன் கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கி அனுப்பியது போல் இருக்கிறது திமுக அரசின் பட்ஜெட் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
மதிப்பீடு
விளக்கம்
திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு சில தினங்களுக்கு முன்பாக திருத்திய பட்ஜெட் அறிக்கையை சட்டப் பேரவையில் தாக்கல் செய்தது. தமிழ்நாடு அரசின் புதிய பட்ஜெட் அறிக்கை குறித்து எதிர் கட்சியினர் விமர்சித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் அவர்கள், ” கடன் கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கி அனுப்பியது போல் இருக்கிறது திமுக அரசின் பட்ஜெட் ” என விமர்சித்ததாக புதிய தலைமுறை செய்தியின் நியூஸ் கார்டு ஒன்று வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
திமுகவின் பட்ஜெட் குறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்துக் குறித்து தேடுகையில், ” மக்களுக்கு டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் டிமிக்கிதான் தமிழ்நாடு பட்ஜெட், வாக்குறுதிகளை கொடுத்து விட்டு கடன், கடன் என்கின்றனர்: யானை பசிக்கு சோளப் பொரி போல உள்ளது தமிழ்நாடு பட்ஜெட் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ” என ஆகஸ்ட் 13-ம் தேதி புதிய தலைமுறை செய்தியில் வெளியாகி இருக்கிறது.
மக்களுக்கு டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் டிமிக்கி தான் தமிழ்நாடு பட்ஜெட் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து பேசியது குறித்து வெளியான நியூஸ் கார்டில் போலியான செய்தியை எடிட் செய்து இருக்கிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், கடன் கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கி அனுப்பியது போல் இருக்கிறது திமுக அரசின் பட்ஜெட் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்ததாக பரவும் புதியதலைமுறை நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்ட போலியான செய்தி என அறிய முடிகிறது.