கங்கனா ரணாவத் என் இளமை நரம்பை முறுக்கேற்றி விட்டார் என ஜெயக்குமார் கூறினாரா ?

பரவிய செய்தி

தலைவி படம் பார்த்த பின் நானே எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. கங்கனா ரணாவத் என் இளமை நரம்புகளை முறுக்கேற்றிவிட்டார் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

jayakumar thalaivi 1

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட தலைவி திரைப்படம் கங்கனா ரணாவத் நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கி இருந்தார். தலைவி திரைப்படம் வெளியாகி அதிமுக தரப்பிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில், தலைவி திரைப்படம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ” தலைவி படம் பார்த்த பின் நானே எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. கங்கனா ரணாவத் என் இளமை நரம்புகளை முறுக்கேற்றிவிட்டார் ” எனக் கூறியதாக ஆனந்த விகடன் உடைய நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Archive link 

உண்மை என்ன ? 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைவி திரைப்படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், படத்தின் நிறை குறைகளோடு, நீக்கப்பட வேண்டிய காட்சிகள் குறித்தும் பேசி இருக்கிறார்.

Advertisement

வைரல் செய்யப்படும் அனந்த விகடன் நியூஸ் கார்டை தேடுகையில், ” தலைவி திரைப்படத்தில் எம்.ஜி.ஆரை ஜெயலலிதா அவமதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதை உடனடியாக நீக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்! ” என்ற நியூஸ் கார்டே வெளியாகி இருக்கிறது.

Facebook link 

ஆனந்த் விகடன் வெளியிட்ட நியூஸ் கார்டில் வேண்டுமென்றே, ” தலைவி படம் பார்த்த பின் நானே எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. கங்கனா ரணாவத் என் இளமை நரம்புகளை முறுக்கேற்றிவிட்டார் ” என எடிட் செய்து தவறாக பரப்பி வருகிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், தலைவி படம் பார்த்த பின் நானே எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. கங்கனா ரணாவத் என் இளமை நரம்புகளை முறுக்கேற்றிவிட்டார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பரப்பப்படும் ஆனந்த் விகடன் நியூஸ் கார்டு போலியானது மற்றும் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button