This article is from Sep 30, 2018

முன்னாள் போப் பெர்னடிக்ட் XVI இஸ்லாம் மதத்தை தழுவினாரா?

பரவிய செய்தி

முன்னாள் போப் புனித இஸ்லாத்தை தழுவி இந்த 2018 ஆண்டின் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றி சைத்தானுக்கு கல் எறியும் காணொளி

மதிப்பீடு

சுருக்கம்

வீடியோவில் காணப்படும் நபர் போப் இல்லை .

விளக்கம்

முன்னாள் போப் பெர்னடிக்ட் XVI இஸ்லாம் மதத்தை தழுவியதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் உலக அளவில் பல்வேறு மொழிகளில் ட்ரெண்ட் ஆகி வருகிறது .

வெள்ளை நிற உடையில் ஒருவரின் படத்துடனும் வீடியோவுடனும் பரப்பப்படும் இந்த செய்தியில் இருப்பவர் போப் என கூறுகின்றனர். இந்த உண்மையான வீடியோ Al_saud  என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அரபியில் எழுதப்பட்டு அதே நாளில் பல்வேறு இடங்களில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் இருப்பவர் உண்மையில் முன்னாள் கல்வித்துறை அமைச்சரும் தற்போதைய மெக்காவின் கவர்னரும் ஆன  இளவரசர் கலிட் அல்-பைசல். இவரை பற்றி இணையத்தில் தேடி பார்க்கையில் இவர் கலிட் அல்-பைசல் என்பது தெளிவாகும்.

2013-இல் ராஜினாமா செய்த போப் பெர்னடிக்ட் XVI -க்கு  தற்போது 91 வயதாகிறது. வாடிகன்  அருகே அவர் வசித்து வருகிறார்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader