ஆஸ்திரேலியாவில் தாயை இழந்த கோலா குட்டிகளுக்கு நரி பால் கொடுத்ததா ?

பரவிய செய்தி

ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் தாயை இழந்த கோலா குட்டிகளுக்கு பெண் நரி பால் கொடுக்கும் வைரல் வீடியோ.

News link | archived link 

Youtube link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

ஆஸ்திரேலியா நாட்டில் நிகழ்த்த காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கில் மரங்கள் எரிந்து நாசமாகின, கோடிக்கணக்கான பறவைகள், ஆயிரக்கணக்கான விலங்குகள் தீயில் கருகி உயிரிழந்தன. இதில், கோலா கரடிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.

Advertisement

இந்நிலையில், காட்டுத் தீயில் குட்டிகளை இழந்த பெண் நரி ஒன்று தாயை இழந்த கோலா குட்டிகளுக்கு பாலூட்டும் காட்சியென வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாக பாலிமர் சேனலில் வீடியோ செய்தி மற்றும் இணையதள செய்தி வெளியாகியது. பாலிமர் சேனலில் வெளியான நரி பாலூட்டும் வீடியோ செய்தி முகநூல் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு வருகிறது. zee hindustan தமிழ் செய்தியிலும் நரி பாலூட்டுவது தொடர்பாக வெளியாகி இருக்கிறது.

News link | archived link 

உண்மை என்ன ? 

தாயை இழந்த, பிற இனத்தைச் சேர்ந்த குட்டிகளுக்கு பெண் நரி பாலூட்டுவதாக கூறுவது அனைவரின் மத்தியில் அன்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சில விலங்குகள் பிற இனத்தைச் சேர்ந்த குட்டிகளை தன் குட்டி போன்று வளர்த்து வந்த சம்பவங்கள் உலக அளவில் ஏராளம். உதாரணமாக, நாய் குட்டிகளுக்கு பாலூட்டிய பசு, நாய் குட்டியை தன் குட்டி போல் வளர்த்து வரும் குரங்கு உள்ளிட்டவை. ஆனால், இந்த வைரல் வீடியோவில் இருப்பது கோலா குட்டிகள் இல்லை என்பதை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

Advertisement

Youtube link | archived link 

சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டில் பெண் நரி கோலா குட்டிகளுக்கு பாலூட்டும் காட்சி என வைரலாகும் வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்பே இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 2016-ம் ஆண்டில் Balkan Music என்ற யூடியூப் சேனலில் ” Mother Fox feeding her babies ” என்ற தலைப்பில் தற்போது வைரலாகும் அதே வீடியோ வெளியாகி இருக்கிறது. பெண் நரி தன்னுடைய குட்டிகளுக்கு பாலூட்டுகிறது.

இதேபோல், 2014-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி Luc Durocher என்ற சேனலில் பதிவான வீடியோவில், பெண் நரி தன் குட்டிகளுக்கு பாலூட்டும் காட்சி மற்றொரு கோணத்தில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளது. அதில், நரியிடம் பால் குடிப்பது நரியின் குட்டிகளே என தெளிவாய் தெரிகிறது. எனினும், இந்த காட்சியை பதிவு செய்தது யார், எங்கு மற்றும் எப்பொழுது எடுக்கப்பட்டு வெளியாகியது என்பது உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கவில்லை.

Youtube link | archived link  

முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து, ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் தாயை இழந்த கோலா குட்டிகளுக்கு, குட்டிகளை இழந்த தாய் நரி பாலூட்டுவதாக பாலிமர் செய்தியில் வெளியான வீடியோ தவறான தகவலாகும். அந்த வீடியோவில் இருப்பது கோலா குட்டிகள் அல்ல, நரியின் குட்டிகளே மற்றும் அந்த பகுதி ஆஸ்திரேலிய காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட இடமும் அல்ல.

தாய் நாரி தன்னுடைய குட்டிகளுக்கு பாலூட்டும் வீடியோ காட்சி 6 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே யூடியூப் உள்ளிட்ட தளங்களில் வெளியாகி இருக்கிறது. சமூக வலைதளங்களில் வைரலாக தவறான வீடியோவை உண்மை என நினைத்து பாலிமர் செய்தி சேனலில் வெளியிட்டு உள்ளனர்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button