ஹோட்டல்களில் கழிப்பறையை இலவசமாக பயன்படுத்தலாமா ?

பரவிய செய்தி

மதிப்பீடு

சுருக்கம்

India Sarai acts of 1867-ன் படி தங்கும் விடுதிகளைக் கொண்ட கட்டிடங்களில் இருக்கும் கழிப்பறைகளைக் மக்கள் இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இதில், ரெஸ்டாரன்ட் எனும் உணவகங்கள் இல்லை.

விளக்கம்

இந்தியாவில் பொது இடங்களில் சுகாதாரமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் கிடைக்கப் பெறாமல் இருப்பதை சந்தித்தவர்கள் பலரும் உண்டு. இதில், பெண்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவர். இந்தியாவில் கழிப்பறை வசதிகள் இல்லாத பகுதிகள் ஏராளம். அரசுகளும் கழிப்பறை வசதிகளை வீடுதோறும், பொது இடங்களிலும் ஏற்படுத்தி வருகின்றன.

Advertisement

எனினும், பொது இடங்களில் குறைவான அளவில் ஏதாவது ஒரு பகுதியில் அமைக்கப்படும் இலவச கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் கூட பெரும்பாலும் பராமரிக்காமல் மக்கள் தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு செல்வதை கண்டு இருப்போம். அதிக அளவில் இன்டர்நெட் பயன்பாடு கொண்ட இந்தியாவில் கழிவறை பற்றாக்குறை தீர்ந்தப்பாடில்லை.

இவ்வாறு இந்தியா இருக்கையில் ஹோட்டல்களில் உள்ள கழிவறைகளை மக்கள் இலவசமாக பயன்படுத்தலாம் என்று சட்டமே உள்ளது என்று ஓர் செய்தி பரவுவதை பார்த்து இருப்போம்.

இந்திய சட்டம் 1867 :

India Sarai acts of 1867-ல் sarai என்பது தங்குவதற்கான இடம் அல்லது சுற்றுலாப்பயணிகள் தங்குவதற்கானக் கட்டிடங்கள் என்று அர்த்தம். இதன் கீழ் தங்கும் விடுதிகள் இடம்பெறும். ரெஸ்டாரன்ட் எனும் உணவகங்கள் இடம்பெறுவதில்லை.

இந்திய சட்டமான India Sarai acts of 1867 section7(2) தங்குமிடங்களில் உள்ள கழிவறைகளை இலவசமாக மக்கள் பயன்படுத்தலாம் என அறிவுறுத்துகிறது. அவசர நேரங்களில் தங்கும் விடுதியான ஹோட்டல்களில் கழிவறைகளை உபயோகிக்கலாம். ஆனால், இதில் உணவகங்கள் இடம்பெறவில்லை. ரெஸ்டாரன்ட்கள் மற்றும் உணவு அருந்தும் பிற இடங்கள் shops and establishment act கீழ் உள்ளன.

ஹோட்டல்கள் என்றால் அனைத்தும் ஒன்று என பலரும் நினைப்பதுண்டு. தங்கும் இடங்கள் மற்றும் உணவு அருந்தும் இடங்கள் இரண்டும் ஹோட்டல்கள் என பொதுவாக கூறுவதால் India Sarai acts of 1867­-ன் படி இரண்டிலும் கழிவறையைப் பயன்படுத்தலாம் எனப் பரவிய செய்தியில் உள்ளது.

Advertisement

தங்குமிடங்களில் கழிவறைப் பயன்படுத்த அனுமதிப்பார்களா என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருக்கும். ஆம், சில ஆண்டுகளுக்கு  இந்தியா கேட் பகுதியை சுற்றிப்பார்க்க வந்த சிலர் அங்கிருந்த ஹோட்டல்களில் கழிவறையை பயன்படுத்த கேட்ட போது முடியாது என மறுத்ததால் அது பெரிய அளவில் பிரச்சனை ஆகியது. அதன்பின், அங்கு இலவச கழிப்பறைகள் கட்டப்பட்டன.

” ஆனால், பெங்களூரில் உள்ள உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் சங்கத்தின் சார்பில் புதிய அறிவிப்பை சென்ற ஆண்டு அறிவித்தனர் . அதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் அருகில் உள்ள எந்தவொரு தங்கும் விடுதி அல்லது உணவகங்களில் உள்ள கழிவறையை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தனர் “.

சட்டங்கள் சில நேரங்களில் நன்மையை அளித்தாலும் அவற்றை பற்றி நாம் நன்கு அறிவதும் இல்லை, சில இடங்களில் அதனை கடைபிடிப்பதும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

India Sarai acts of 1867-ல் தங்கும் இடங்களில் கழிவறையை இலவசமாக பயன்படுத்தாலம் என்பது நன்மையாக இருந்தாலும், பொது இடங்களில் அதிக அளவிலான கழிப்பறைகளை ஏற்படுத்தி தருவதே சிறந்த இந்தியாவின் அடையாளம்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button