குளிர்பானத்தில் விஷம் கலந்ததாக வைரலாகும் ஃபார்வர்டு செய்தி உண்மையா ?

பரவிய செய்தி

வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மேங்கோ ஜூஸ் போன்றவற்றை வாங்கி தர வேண்டாம். frooti குளிர்பானத்தில் ஒருவகையான விஷம் கலந்து உள்ளதால் பலர் இறந்து உள்ளனர். இந்த செய்தியை உடனடியாக பகிரவும் என ஆடியோ பதிவு ஒன்று வாட்ஸ் அஃப் இல் ஃபார்வர்டு செய்யப்பட்டு வருகிறது.

மதிப்பீடு

சுருக்கம்

குளிர்பானங்களில் ஹெச்.ஐ.வி மற்றும் விஷம் கலந்து உள்ளதாக பரவிய ஃபார்வர்டு செய்திகளை முன்பே வதந்திகள் என நிரூபித்து இருந்தோம். குளிர்பானத்தில் விஷம் கலந்ததால் இவ்வாறு ஆகியதாக கூறும் படங்களும், வீடியோவும் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்கள்.

விளக்கம்

வாட்ஸ் அஃப் ஃபார்வர்டு செய்திகள் பெரும்பாலும் பல இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ உடன் ஒரு ஆடியோ பதிவை இணைத்து பகிரப்படுபவை. உண்மையான செய்தி என்னவென்று அறியாமல் பலரும் அதனை ஆயிரக்கணக்கில் பகிர்ந்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

மேலும் படிக்க : Cadbury தயாரிப்புகளில் HIV நோயாளியின் இரத்தம் கலந்ததா ?

Advertisement

Frooti குளிர்பானத்தில் விஷம் கலந்து இருப்பதாக மலையாள மொழியில் இருக்கும் மீம் உடன் சில இறந்த உடல்கள், ஒரு பெண் ரத்தத்துடன் இருக்கும் வீடியோ , கோக்க-கோலா பாட்டில்கள் உள்ள புகைப்படத்தை இணைத்து ஆடியோ உடன் ஃபார்வர்டு செய்து வருகின்றனர்.

முதலில், ஃபார்வர்டு செய்தியுடன் இருக்கும் வீடியோ பற்றி தேடிப் பார்க்கையில், அந்த வீடியோ தெலங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் பொழுது எடுக்கப்பட்டவை எனத் தெரிய வந்தது. ஆகஸ்ட் 31, 2018-ல் டைம்ஸ் நவ் பத்திரிகையில் வெளியான செய்தியில், தெலங்காவின் உதவி ஆய்வாளர் ஒருவர் பிற பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை கண்டறிந்து அதற்கு எதிராக பேசிய தன் மனைவி மற்றும் மனைவியின் தாயை தாக்கியதாக ” குறிப்பிட்டு உள்ளனர்.

ஃபார்வர்டு செய்யப்பட்ட செய்தியில் இருக்கும் வீடியோ காட்சியின் முழு வீடியோவில், உதவி ஆய்வாளர் மனைவியை தாக்குவது பதிவாகி இருக்கும். அந்த முழு வீடியோ டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியாகி இருக்கிறது. இதே சம்பவத்தின் காட்சிகள் இந்து-முஸ்லீம் பிரச்சனையில் இந்தியாவில் வீட்டில் இருப்பவர்களை காரணமின்றி கொலை செய்கின்றனர் என பாகிஸ்தான் நாட்டின் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Advertisement

body

அடுத்ததாக, மற்றொரு புகைப்படத்தில் இருக்கும் இறந்தவர்களின் உடல்கள் லாரி விபத்தில் இறந்தவர்களின் உடல்களாகும். இந்த சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தவை. இதற்கு முன்பாகவும் இதே படங்கள் மற்றொரு புரளியில் பகிரப்பட்டன.

fake coke coke

மற்றொரு புகைப்படத்தில் இருக்கும் கோக்க-கோலா பாட்டில்கள், அதிகாரிகள் ஆய்வு செய்தது, கைது செய்த நபரின் புகைப்படங்கள் ஆகியவை கோக் மற்றும் ஸ்ப்ரைட் உள்ளிட்ட குளிர்பானங்களை போலியான முறையில் தயாரிக்கும் கும்பலை கைது செய்து, அந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்யும் பொழுது எடுக்கப்பட்டவை. இந்த சம்பவம் 2015-ல் பாகிஸ்தான் நாட்டில் நிகழ்ந்தது.

மேலும், Frooti குளிர்பானம் Parle Agro நிறுவனத்திற்கு சொந்தமானது. ஆனால், கோக்க-கோலா நிறுவனத்தின் புகைப்படத்துடன் பகிரப்பட்டு உள்ளது. இப்படி பொருந்தாத சம்பவத்துடன், பிற காரணங்களில் இறந்தவர்களின் உடல்களின் புகைப்படங்கள் ஆகியவற்றை இணைத்து தவறான ஃபார்வர்டு செய்திகளை பரப்பி வருகின்றனர்.

தொடர்புடைய வதந்திகள் :Dairy milk சாக்லேட்டில் புழுக்கள் | குழந்தை மரணமா ?

இனி, ஃபார்வர்டு செய்தியாக வருபவைகளை உறுதியாக ஆராய்ந்து பகிரச் செய்க.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Tags

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
Close
Close