எரிபொருள் விலை உயர்வு என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என அண்ணாமலை கூறியதாக வதந்தி !

பரவிய செய்தி
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் – பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சை பேச்சு
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் பெட்ரோல் விலையைப் போன்றே டீசல் விலையும் 100ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், சமையல் எரிவாயு விலையும் மாதந்தோறும் உயர்ந்துக் கொண்டே இருக்கிறது. இதனால், ஆளும் பாஜக அரசிற்கு எதிராக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சையாக பேசியதாக புதியதலைமுறை செய்தியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து புதியதலைமுறை செய்தியின் முகநூல் பக்கத்தில் தேடுகையில், அக்டோபர் 24-ம் தேதி அவ்வாறான செய்தி ஏதும் இடம்பெறவில்லை. மாறாக, ” பாஜக மீது கைவைத்தால் வட்டியும், முதலுமாக திருப்பி கொடுக்கப்படும் ” எனப் பேசிய செய்தியே வெளியாகி இருக்கிறது.
வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது. மேற்காணும் செய்தியில் இடம்பெற்ற புகைப்படத்தையே வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இதுகுறித்து, புதியதலைமுறை செய்தியின் இணையதள பிரிவைத் தொடர்பு கொண்டு பேசுகையில், “இதை நாங்கள் வெளியிடவில்லை. போலியான செய்தி ” எனத் தெரிவித்து இருந்தனர்.
மேலும் படிக்க : கேஸ் பதிலாக விறகடுப்பை பயன்படுத்துங்கள் என அண்ணாமலை கூறியதாகப் பரவும் போலிச் செய்திகள் !
இதற்கு முன்பாகவும், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுடன் பாஜக தலைவர் அண்ணாமலையைத் தொடர்புப்படுத்தி போலிச் செய்திகள் பரப்பப்பட்டு இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சை பேச்சு என்று வைரல் செய்யப்படும் புதிய தலைமுறை நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.