ஜி20 மாநாடு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்தியில் மட்டுமே பெயர் பலகை வைக்கப்பட்டதா ?

பரவிய செய்தி

ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியில் மட்டுமே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை!

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ஜி20 அமைப்பிற்கான தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, ஜி20 அமைப்பின் உச்சிமாநாட்டை நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் மோடி, அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், காங்கிரஸ், திமுக, அதிமுக உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்ட போது, அவர்களுக்கு முன்பாக வைக்கப்பட்ட பெயர் பலகை இந்தியில் மட்டுமே வைக்கப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Archive link 

” ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியில் மட்டுமே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை! ” என்ற தலைப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்பாக இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்துடன் சன் நியூஸ் கார்டு வெளியிட்டு இருந்தது. இந்த கார்டை பாஜக, திமுக, பாமக என பல்வேறு கட்சியினரும் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

ஆனால், சன் நியூஸ் சமூக வலைதள பக்கங்களில் இருந்து அந்த நியூஸ் கார்டு நீக்கப்பட்டு இருக்கிறது.

உண்மை என்ன ? 

டிசம்பர் 5ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் வீடியோ நரேந்திர மோடி எனும் யூடியூப் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் பிரதமர், அமைச்சர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்களின் முன்பாக உள்ள பெயர் பலகையில் இந்தியில் மட்டும் உள்ளது. ஆனால், அந்த பெயர் பலகையின் பின்பாக ஆங்கிலத்தில் பெயர்கள் இடம்பெற்று இருக்கிறது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முன்பாக வைக்கப்பட்ட பெயர் பலகையில் ஆங்கிலத்தில் பெயர் மற்றும் பொறுப்பு இடம்பெற்று இருப்பதை பார்க்கலாம்.

Twitter link | Archive link

நாடாளுமன்ற எம்.பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் ட்விட்டர் பக்கத்தில், ” அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டம் RBCC அரங்கில் நடைபெறவுள்ளது ” என தனது இருக்கையில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டு உள்ளார். அதிலும், ஆங்கிலதில் பெயர் இடம்பெற்று இருப்பதை பார்க்கலாம். 

முடிவு : 

நம் தேடலில், ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியில் மட்டுமே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை எனப் பரப்பப்படும் செய்தி தவறானது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்திலும் பெயர் பலகை வைக்கப்பட்டு இருக்கிறது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader