பிஜேபி ஆட்சியில் கங்கை நதி தூய்மையாகியதாக பதிவிட்ட வானதி ஸ்ரீநிவாசன் !

பரவிய செய்தி

2009-ல் காங்கிரஸ் ஆட்சியில் கங்கை நதியின் நிலை, 2019-ல் பிஜேபி ஆட்சியில் கங்கை நதியின் நிலை என தமிழக பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் பதிவிட்ட பதிவு.

மதிப்பீடு

சுருக்கம்

10 year challenge என்ற ஹாஸ்டாக் உடன் வானதி ஸ்ரீனிவாசன் பகிர்ந்த கங்கை நதியின் படங்கள் இரண்டுமே தவறான வருடத்தைக் குறிக்கின்றன.

முதல் படம் 2011-லும், இரண்டாம் படம் 2009-ம் ஆண்டிலும் எடுக்கப்பட்டவை.

விளக்கம்

2019-ம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் கடந்த ஆண்டுகளில் மோடி ஆட்சியில் நிகழ்ந்த சாதனைகள், மாற்றங்கள் எனக் கூறி பல பதிவுகளை அக்கட்சியைச் சேர்ந்தவர்களும், ஆதரவாளர்களும் அதிகம் பதிவிட்டு வருகின்றனர்.

அவற்றில் ஒன்றாக, தமிழக பாரதீய ஜனதா கட்சியின்  பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் ட்விட்டர் பக்கத்தில் 10 year challenge என்ற ஹாஸ்டாக் உடன் கங்கை நதி சுத்தப்படுத்தப்பட்டதாக இரு புகைப்படங்களைப் பதிவிட்டு உள்ளார்.

Advertisement

இப்பதிவை வானதி ஸ்ரீனிவாசன் மட்டுமின்றி தென்னிந்திய பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த பலரும் பதிவிட்டு வருகின்றனர். மேலும், வலதுசாரி பக்கங்களும் இதே பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன ? 

2009 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் கங்கை நதியின் நிலை எனக் குறிப்பிட்ட முதல் படமானது உண்மையில் 2011 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டவை. 2015 ஜூன் மாதம் 23-ம் தேதி outlook என்ற இணையதளத்தில் இப்படம் இடம்பெற்றுள்ளது.

Advertisement

யூனியன் நீர் ஆதாரத்துறை அமைச்சர் உமா பாரதி புதிதாக புவன் கங்கா மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை தொடங்கி வைத்தார். அதில், கங்கை நதியின் நிலைக் குறித்த புகைப்படங்களை மக்கள் பதிவிடலாம் என அறிவிக்கப்பட்டது.

அடுத்து, 2019-ல் கங்கை நதி சுத்தமாக இருப்பதாக பதிவிட்ட புகைப்படமானது Flickr என்ற தளம் மூலம் 2009 ஆம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி வாரணாசியில் எடுக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக, வானதி ஸ்ரீனிவாசன் பகிர்ந்த படங்களின் வருடங்களே வேறாக இருக்கிறது. பிஜேபி ஆட்சியில் சுத்தமாக இருப்பதாக கூறும் படமும் காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்டவை. இரு படங்களும் காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்டவை.

பொருந்தாத படங்களை இணைத்து கங்கை நதி சுத்தம் செய்யப்பட்டதாக 10 year challenge என வானதி ஸ்ரீனிவாசன் பதிவிட்டுள்ளார். கங்கை நதி சுத்தம் செய்யப்படும் அதற்காக ஆயிரக்கணக்கான கோடி நிதி ஒதுக்குவதாக பிரதமர் மோடியே அறிவித்தார். மேலும், அதற்காக அமைச்சரவை குழுவையும் உருவாக்கினார். எனினும், இன்றுவரை கங்கை தூய்மை செய்யப்பட்டதாக உண்மையான விவரங்களை அரசு அளிக்கவில்லை என்பதே உண்மை.

பேராசிரியர் ஜி.டி.அகர்வால்  கங்கை நதி தூய்மை செய்யப்பட வேண்டும், நதியை காக்க வேண்டும் என 112 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து போராடி உயிர் நீத்தவர்.

தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகளால் கூறப்படும் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்து பகிரவும்.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Support with

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close