நிர்மலா சீதாராமன் மக்களை விறகு அடுப்பில் சமைக்க சொன்னதாகப் பரவும் வதந்தி!

பரவிய செய்தி
கேஸ் சிலிண்டர் கட்டணம் செலுத்த முடியாதவர்கள் விறகு அடுப்பில் சேமிக்க பழிக் கொள்ள வேண்டும் – மத்திய அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன்.
மதிப்பீடு
விளக்கம்
சமையல் எரிவாயு விலை அதிகரித்ததற்கு மக்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ” கேஸ் சிலிண்டர் கட்டணம் செலுத்த முடியாதவர்கள் விறகு அடுப்பில் சேமிக்க பழிக் கொள்ள வேண்டும் ” எனக் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.
ஆனால், நிர்மலா சீதாராமன் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம் குறித்து அப்படி எந்தவொரு கருத்தும் கூறவில்லை. வைரலாகும் புதிய தலைமுறை செய்தி சேனலின் முகநூல் பக்கத்திலும் அப்படிவொரு செய்தி வெளியாகவில்லை.
மேலும் படிக்க : ஊட்டி மலை ரயில் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் போலி நியூஸ் கார்டு !
இதற்கு முன்பாக, ஊட்டி ரயில் சர்வதேச தரத்தில் மாற்றப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்ய 3000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாதவர்கள் ஊட்டி செல்ல ஏன் ஆசைப்படவேண்டும் என நிர்மலா சீதாராமன் கூறியதாக போலியான நியூஸ் கார்டு வைரலாகியது.
மீண்டும் அதே நியூஸ் கார்டில் சிலிண்டர் விலை ஏற்றம் குறித்தும் போலியான கருத்தை எடிட் செய்து தவறாக பரப்பி வருகிறார்கள்.