This article is from Sep 07, 2021

கேஸ் பதிலாக விறகடுப்பை பயன்படுத்துங்கள் என அண்ணாமலை கூறியதாகப் பரவும் போலிச் செய்திகள் !

பரவிய செய்தி

இஸ்லாமிய நாடுகளை இருந்து இறக்குமதியாகும் கேஸ் சிலிண்டர்களை புறக்கணித்து பாரதப் பண்பாட்டு அடையாளமான விறகடுப்பை உபயோகிப்போம் – பாஜக தலைவர் அண்ணாமலை சூளுரை

Twitter link | Archive link 

நம்ம முன்னோர்கள் என்ன கேஸ் வச்சா சமைச்சாங்க ? கேஸ் வாங்க முடியலனா விறகு அடுப்பை பயன்படுத்துங்கள் – அண்ணாமலை

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை மக்களை கேஸ் பயன்பாட்டிற்கு பதிலாக விறகடுப்பை பயன்படுத்துமாறு கூறியதாக இருவேறு நியூஸ் கார்டுகள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

இவ்விரு நியூஸ் கார்டுகளையும் வைத்து அண்ணாமலைக்கு எதிராக கண்டனம் தெரிவித்தும், ட்ரோல் செய்தும் மீம்ஸ் மற்றும் பதிவுகள் வெளியாகி வருகிறது.

உண்மை என்ன ?

அண்ணாமலை விறகடுப்பை பயன்படுத்துங்கள் எனக் கூறியதாக பரப்பப்படும் நியூஸ் கார்டுகள் இரண்டுமே பாஜகவைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் கதிர் நியூஸ் பக்கத்துடையது.

Facebook link

இதுகுறித்து கதிர் நியூஸ் முகநூல் பக்கத்தை ஆராய்கையில், அண்ணாமலை பேசியதாக வெளியான பிற நியூஸ் கார்டுகள் கிடைத்தன. அவற்றில் அண்ணாமலை விறகடுப்பை பயன்படுத்த சொன்னதாக எடிட் செய்து இருக்கின்றனர்.

Facebook link 

மேலும் படிக்க : கேஸ் விலை குறைய விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடத்த வேண்டும் என்றாரா அண்ணாமலை ?

இதேபோல், பாஜக தலைவர் அண்ணாமலை கேஸ் விலை குறைய வேண்டும் என்றால் விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடத்த வேண்டும் எனக் கூறியதாக போலிச் செய்தியை பரப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : நிர்மலா சீதாராமன் மக்களை விறகு அடுப்பில் சமைக்க சொன்னதாகப் பரவும் வதந்தி!

கடந்த ஆண்டிலும், பாஜக அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேஸ் விலை அதிகம் என்றால் விறகடுப்பை பயன்படுத்துமாறு கூறியதாக போலியான செய்தி பரவியது.

முடிவு : 

நம் தேடலில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேஸ் பயன்பாட்டிற்கு பதிலாக மக்களை விறகடுப்பை பயன்படுத்துமாறு கூறியதாக பரப்பப்படும் நியூஸ் கார்டுகள் போலியானவை என அறிய முடிந்தது.

Please complete the required fields.




Back to top button
loader