பாஜகவின் காயத்ரி ரகுராம் பற்றி ஆபாசமாக பரப்பப்படும் வதந்தி செய்தி !

பரவிய செய்தி

அண்ணாமலை எனக்கு முதுகில் குத்திவிட்டார் – காயத்ரி ரகுராம் !

மதிப்பீடு

விளக்கம்

தமிழக பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தன்னை முதுகில் குத்திவிட்டார் எனக் கூறியதாக யூடியூப் சேனல் வெளியிட்ட கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் ஆபாசமாக பரப்பப்பட்டு வருகிறது.

Advertisement

உண்மை என்ன ? 

சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சியின் நிர்வாகிகள் வகிந்து வந்த பதவிகளை மாற்றி புதிய பொறுப்புகளை வகிக்கும் நிர்வாகிகளின் பெயர்களை வெளியிட்டு இருந்தார். அதில், தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டு இருந்தார்.

காயத்ரி ரகுராம் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து காயத்ரி ரகுராம் கூறியது போல்  சங்கமம் எனும் யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோவில் இடம்பெற்ற கார்டே தற்போது சமூக வலைதளங்களில் ஆபாசமாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த யூடியூப் சேனலில் தமிழக அரசியல் குறித்த வீடியோக்கள் தரக்குறைவான தலைப்புகளால் வெளியிடப்பட்டு வருவதையும் பார்க்க முடிந்தது.

Advertisement

Twitter link | Archive link 

இப்படி பரப்பப்படும் வீடியோ கார்டு போலியானது மற்றும் போலியான செய்தி என காயத்ரி ரகுராம் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

முடிவு : 

நம் தேடலில், தமிழக பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் அண்ணாமலை பற்றி கூறியதாக வெளியான வதந்தி செய்தி ஒன்று ஆபாசமாக பரப்பப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button