This article is from Jul 17, 2018

எதிரே எந்த வாகனமும் வராமல் விபத்திற்குள்ளாகும் வாகனங்கள்!

பரவிய செய்தி

எதிரே எந்த வாகனமும் வராமல் விபத்திற்குள்ளாகும் வாகனங்கள். என்ன மர்மம் என்று தெரியவில்லை.CCTV காட்சிகள்

மதிப்பீடு

சுருக்கம்

இரு வாகனங்கள் மோதிக்கொள்ளும் காட்சியில் ஒரு வாகனத்தை மட்டும் மறைத்து  எடிட் செய்யப்பட்டது.

விளக்கம்

எதிரே எந்த  வாகனமும் மோதாமல் விபத்துக்குள்ளாகும் வாகனங்கள் என்று செய்தியோடு சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது. இதில் ஏதோ அமானுஷ்யம் இருப்பதாகவும் அதற்கு ஆதாரம் இதுதான் எனவும் கூறினர். வீடியோ பார்க்கையில் உண்மை தானோ என எண்ணும் வகையில் எடிட் செய்யப்பட்ட வீடியோ தான் இது.
GHOST CAR என தலைப்பில் இருந்த கண்ணுக்கு புலப்படாத சக்தி மீது கார் மோதும் இந்த வீடியோவை இத்தாலிய கிராபிக் கலைஞரான டொனாட்டோ சான்சோன் (Donato Sansone) என்பவர் அற்புதமாக எடிட் செய்துள்ளார். இதனைவிமியோ (vimeo) பக்கத்தில் மே மாதம் பதிவுட்டுள்ளார்.

இவருடைய படைப்பை இத்தாலிய திரைப்பட விழாவில் பாராட்டியுள்ளனர்.

இத்தாலிய மொழி:
“Programma che inizia con un regalo quasi inaspettato. Un mini corto realizzato da Donato Sansone. Che in questo periodo si
trova a Parigi per realizzare un nuovo cortometraggio, ma ricordando gli amici ha spedito a Fasano il link di questo breve
lavoro intitolato “Ghost Crash”. L’idea consiste nel prendere filmati d’incidenti tra due auto cancellandone una, l’effetto fa
quasi paura. La bassa qualità delle riprese fatte da telecamere di sicurezza viene mantenuta cancellando perfettamente l’altra
vettura. L’improvviso essere sbalzate via delle auto colpite dal nulla è davvero inquietante e inaspettato. Un’altra grande idea
di Donato Sansone che potete vedere qui.”

 

தமிழில்: 

“நிகழ்ச்சி ஒரு  எதிர்பாராத பரிசுடன் தொடங்கி இருக்கிறது. இந்த சின்ன ஷார்ட் டொனாட்டோ சான்சோனால் உருவாக்கப்பட்டது. இரு கார்களில் விபத்து ஏற்படும் காணொளியில் ஒரு காரை நீக்கி வடிமைத்திருப்பது திகிலை ஏற்படுத்துகிறது. கண்காணிப்பு கேமராக்களின் மூலம் எடுக்கப்பட்ட குறைந்த தரத்தில் உள்ள காட்சிகளில் கச்சிதமாக இன்னொரு காரை அழித்துள்ளார். திடீரென எதுவும் மோதாமல் கார்கள் தூக்கி எறியப்படுவது எதிர்பாராத விதமாகவும் குழப்பமாகவும் உள்ளது. டொனாட்டோ சாம்சனின் இன்னொரு மிகச்சிறந்த யோசனையை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.” என பாராட்டு பெற்றார்.

 

ghostCRASH from Donato Sansone (milkyeyes) on Vimeo.

மிகவும் அதிகமாக பகிரப்பட்ட இந்த காணொளி உண்மையில் எடிட் செய்யப்பட்டது. எனினும் சிறிதளவு கூட சந்தேகம் வராமல் இதை உருவாக்கி இருக்கும் கலைஞரை பாராட்டியே ஆக வேண்டும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader