மத்தியபிரதேசத்தில் ராணுவ வீரர் குடும்பத்திற்கு வீடு கட்டி தந்த இளைஞர்கள் !

பரவிய செய்தி
மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் எல்லையில் வீரமரணமடைந்த இராணுவ வீரரின் குடும்பம் குடிசை வீட்டில் வாழ்ந்து வரும் நிலையை கண்டு வருத்தமுற்ற அங்குள்ள இளைஞர்கள் ஒன்றினைந்து 11லட்சம் ரூபாய் நிதி திரட்டி அழகான கட்டிடம் கட்டி நேற்று சுதந்திர தின அன்று அவரின் குடும்பத்திற்கு அளித்துள்ளனர்.. இளைஞர்களின் நற்செயலுக்கு பாராட்டுகள்…
மதிப்பீடு
விளக்கம்
மத்தியபிரதேச மாநிலத்தில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரரின் குடும்பம் குடிசை வீட்டில் வாழ்ந்து வருவதை கண்ட இளைஞர்கள் 11 லட்சம் மதிப்பில் புதிய வீடு ஒன்றை கட்டி பரிசளித்து உள்ளதாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
ராணுவ வீரரின் குடும்பத்திற்கு இளைஞர்கள் புதிய வீடு கட்டிக் கொடுத்ததாக வைரலாகும் செய்தியின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம். அதில், ” Local youngsters gift martyr’s widow new house on Raksha Bandhan ” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 16-ம் தேதி டைம்ஸ்நவ்நியூஸ் தளத்தில் வெளியான செய்தியை காண முடிந்தது.
1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் சுனீர் திரிபுராவில் வீர மரணமடைந்தார். அவரின் இறப்பிற்கு பிறகு மனைவி மற்றும் குழந்தை கடந்த 27 ஆண்டுகளாக மத்தியபிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள பிப்லியா என்ற கிராமத்தில் ஓர் குடிசை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்திய ராணுவ வீரருடைய குடும்பத்தின் ஏழ்மை நிலையை கண்டு வருத்தமடைந்த டெபால்பூர் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்த குழு ராணுவ வீரரின் குடும்பத்திற்கு புதிய வீட்டினை கட்டிக் கொடுக்க திட்டமிட்டனர்.
இதற்காக கிராம மக்களின் உதவி, இளைஞர்களின் முயற்சியில் ரூபாய் 11 லட்சம் நிதி திரட்டப்பட்டது. அதில், ரூ10 லட்சம் மத்தியில் புதிய வீட்டினை கட்ட தீர்மானத்தினர். 2018-ல் வீடு கட்டும் பணிகள் துவங்கப்பட்டது. மீதமுள்ள தொகையில் இறந்த ராணுவ வீரர் சுனீர்க்கு கிராமத்தில் சிலை வைக்க முடிவெடுத்தனர்.
ராணுவர் வீரரின் குடும்பத்திற்கு பரிசாக வழங்க இருந்த வீட்டினை நாட்டின் 73வது சுதந்திர தினத்தன்று வழங்கலாம் என முடிவெடுத்தனர். இந்நிலையில், ஆகஸ்ட் 15-ம் தேதி இந்திய சுதந்திர தினம் மற்றும் ராக்சா பந்தன் நாளில் புதிய வீட்டினை சுனீர் குடும்பத்திற்கு விமர்சையாக பரிசளித்துள்ளனர். இறந்த ராணுவ வீரர் சுனீர் உடைய இளைய மகன் வினோத் தற்பொழுது எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
27 वर्ष पूर्व शहीद हुए इंदौर जिले के बेटमा के पीर पीपल्या गाँव के बीएसएफ़ के जवान शहीद मोहन सिंह सुनेर के परिवार के लिये, जो अभाव में जीवन जी रहा था ,
1/2— Office Of Kamal Nath (@OfficeOfKNath) August 15, 2019
இளைஞர்களின் முயற்சியை பாராட்டும் விதத்தில் மத்தியபிரதேச மாநில முதல்வர் கமல்நாத் உடைய அதிகாரப்பூர்வ அலுவலக ட்விட்டர் பக்கத்தில் இளைஞர்கள் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு வீடு வழங்கியது குறித்து ஆகஸ்ட் 15-ம் தேதி பதிவிடப்பட்டு உள்ளது.
இளைஞர்கள் ஒன்றிணைத்து பாராட்டுக்குரிய செயலை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இந்திய ராணுவத்தில் உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு சேவையாற்றி தங்களின் தேசப்பற்றை நாட்டிற்கு எடுத்துரைத்து உள்ளனர்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.