பெண் பிள்ளைகளுக்கான சுகன்யா யோஜனா: உண்மை நிலவரம் என்ன ?

பரவிய செய்தி

ஒன்றுமுதல் பத்து வயதுவரை உள்ள பெண்குழந்தை உடையவர்களுக்கு ஆனந்த செய்தி. உங்கள் அருகாமையில் உள்ள ஸ்டேட் பேங்கில் சென்று சுகன்யா யோஜனா திட்டத்தில் வருஷத்துக்கு ஆயிரம் வீதம் கட்டி வந்தால் அந்த பெண்ணின்15ம் வயது துவக்க நாளில் ரூபாய் ஆறுலட்சங்கள் கிடைக்கும். ஒரு வயது பெண் குழந்தைகள் முதல் 10 வயது பூர்த்தியடையாத பெண்குழந்தைகள் உள்ளவர்அருகில் உள்ள ஸ்டேட் வங்கிக்கு உடனே செல்லுங்கள். அருகில் உள்ள பெண்குழந்தைகள் உள்ள பெண்களுக்கு இந்த விஷயத்தை உடனே தெரிவியுங்கள். நன்றி!!!

மதிப்பீடு

விளக்கம்

வர வர வாட்சப் வெறியர்களின் அட்டகாசம் தாங்க முடியலை, இன்று வந்த ஃபார்வர்ட் மெசேஜ் ” சுகன்யா யோஜனா ” திட்டம் பற்றிய முரண்பட்ட தகவல்கள்.

Advertisement

ENGLISH VERSION: “ STATE BANK OF INDIA ” have introduced new scheme called ” Sukanya Yojana ” In this they have mentioned Any person having daughter from age 1 to 10, They have to pay Rs.1000/- per year, after 14 years, meaning in 14 years after paying 14000 when daughter will become 21 years old a person will have Rs.6,00,000/-. Forward this message to all your relatives. Government has implemented this scheme all over in India. _Only for Girl. Always share good information to others.

 

Has க்கு பதிலா have, having daughter, after 14 years, meaning in 14 years after இப்படி ஏராளமான பிழைகள். சொற்குற்றத்தையாவது மன்னிச்சிடலாம், ஆனா எதுக்கு இப்படி ஒரு பொய்யான தகவலை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை.

“ சுகன்ய சம்ரித்தி யோஜனா “ என்று ஒரு திட்டம் இருக்கு, “ சுகன்யா யோஜனா ” இல்லை. அது 2014-ல் இருந்து உள்ளது, புதிய திட்டம் இல்லை. இது இந்திய அரசின் திட்டம், ஸ்டேட் வங்கி மட்டுமல்லாது பல வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது.

மெசேஜில் சொல்வது போன்று கேரண்ட்டி எல்லாம் கிடையாது. சிம்பிளா சொன்னா பெண் குழந்தைகளுக்கு மட்டுமான வரிவிலக்கு உடைய ரிக்கெரிங் டெபாசிட் மாதிரிதான் இது. 8.6% வட்டியில் ஆரம்பித்து இப்போ 8.1%ல வந்து நிற்கிறது. இன்னும் குறைய வாய்ப்புள்ளது.

Advertisement

இத்திட்டத்தில் பெண் குழந்தை பெயரில் ஆண்டுக்கு 1000 ரூபாய் முதல் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம், அதிக பட்சமாக 15 ஆண்டுகள் முதலீடு செய்யலாம், கணக்கு ஆரம்பித்ததிலிருந்து 21 ஆண்டுகள் கழித்து இது முதிர்வடையும். 21 ஆண்டுகளும் அவ்வப்போது இருக்கும் வட்டிக்கு ஏற்ப உங்க முதலீடு வளரும். இதில் சொல்வது போன்று கேரண்டி எல்லாம் கிடையாது .

” இன்று இருக்கும் 8.1% அடுத்த 21 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால், 14 ஆண்டுகள் மாசம் 83 ரூபாய் (ஆண்டுக்கு 1000 ரூபாய்) கட்டிட்டு அதன் பின் 7 ஆண்டுகள் காத்திருந்தால் 21 ஆண்டுகள் கழித்து தோராயமா 45,000 ரூபாய் கிடைக்கும். இந்த வட்டி 21 ஆண்டுகள் தொடர வாய்ப்பு குறைவு “.

14 ஆயிரம் செலுத்தி விட்டு ஆறு லட்சம் வேண்டும் என்றால், அந்த பணத்திற்கு லாட்டரி சீட்டுதான் வாங்க வேண்டும். ஆறு லட்சம் ஆகுறதுக்கு 21 வருசமும் தொடர்ந்து எவ்வளவு வட்டி வர வேண்டும் தெரியுமா? 25% கூட்டு வட்டி 21 வருசம் வந்தால்தான் வெறும் 14 ஆயிரம் முதலீடு 6 லட்சம் ஆகும். 

open sukanya account

இந்த ரெண்டு கணக்குகளையும் ஐந்து நிமிடத்தில் எக்செல் ஷீட் ஒன்றில் கண்டுபிடிச்சிடலாம். அதைச் செய்ய யாருக்கும் பொறுமையில்லை.

குறைந்த பட்சம் இது போன்ற Fake news ஃபார்வேர்ட் செய்யாமலாவது இருக்கலாம், பாவம் ஸ்டேட் பாங்க் ஊழியர்கள், நாளை முதல் கூட்டம் குவியப் போகிறது.

 

– ஸ்ரீராம் நாராயணன்

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button