வைரலாகும் இரயில் நிலையப் பெயர் பலகையில் “GoBackModi” என எடிட் செய்யப்பட்ட படம் !

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக மே 26-ம் தேதி சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், இரயில்வே துறையின் புதிய திட்டங்கள என பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் “GoBackModi” எனும் ஹாஷ்டக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரென்ட் செய்து வருகிறார்கள். இந்நிலையில், தமிழகத்தின் இரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகை ஒன்றில் ” Tamilnadu Says Go Back Modi, we Hate You ” என எழுதப்பட்டு இருப்பதாக இப்புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

இரயில் நிலையத்தின் பெயர் பலகையில் “GoBackModi” என எழுதப்பட்டு இருக்கும் புகைப்படம் எடிட் செய்யப்பப்டது. இப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2016-ல் பிசினஸ் இன்சைடர் இணையதளத்தில், அசாம் திப்ருகர் – கன்னியாகுமாரி விவேக் எக்ஸ்பிரஸ் பயணத்தின் போது புகைப்பட கலைஞர் எட் ஹான்லே எடுத்த புகைப்படங்களின் தொகுப்பை வெளியிட்டு இருந்தது. அதில் உண்மையான புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

புகைப்பட கலைஞர் எட் ஹான்லே கன்னியாகுமரி இரயில் நிலையத்தில் எடுத்த பெயர் பலகைப் படத்தில் “GoBackModi” என எடிட் செய்து உள்ளனர்.

முடிவு : 

நம் தேடலில், தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து “GoBackModi” என பரப்பப்படும் இரயில் நிலையத்தின் பெயர் பலகை புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button