This article is from Mar 06, 2019

#GoBackModi ட்ரெண்ட் ஆக பாகிஸ்தான் காரணமா ?

பரவிய செய்தி

பிரதமர் மோடி தமிழ்நாடு வரும் போது எல்லாம் ட்ரென்டிங்கில் இருந்த #GoBackModi பாகிஸ்தானியர்கள் மூலமே அதிகம் ட்வீட் செய்யப்படுகிறது.

மதிப்பீடு

சுருக்கம்

இந்தியாவில் ட்ரென்ட் செய்யப்பட்ட விஷயங்கள் மட்டுமே இந்தியா ட்ரென்ட்ஸ் என ட்வீட்டரில் வரும். பாகிஸ்தானியர்கள் ட்வீட் செய்து #GoBackModi ட்ரென்ட் செய்யப்பட்டது என்பது முற்றிலும் தவறான தகவல்.

விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வருகைக்கு எதிராக  ட்வீட்டரில் #GoBackModi என பதிவிட்டு எதிர்ப்பு தெரிவிப்பது தமிழகத்தில் அதிகம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ட்வீட்டர் ட்ரெண்டில் நம்பர் ஒன் ஆக #GoBackModi  இடம் பிடிக்கும்.

ஆனால்,  #GoBackModi  தமிழ்நாட்டில் இருந்து ட்ரெண்ட் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் நாட்டில் இருந்தே ட்ரெண்ட் செய்யப்படுகிறது என்ற செய்தி ஃபேஸ்புக், வாட்ஸ் ஆஃப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சமீபத்தில் பகிரப்படுகிறது. பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே கூட இதே செய்தியை பதிவிட்டு உள்ளார்.

அதில், #GoBackModi பாகிஸ்தானில் இருந்து 58%, இந்தியாவில் இருந்து 22% , UK-வில் இருந்து 6% , சென்னையில் இருந்து வெறும் 4% மட்டுமே ட்வீட் செய்யப்பட்டுள்ளதாக பரவி வருகிறது.

ஆனால், #GoBackModi ட்ரெண்ட்-க்கு எதிராக கூறும் இந்த புள்ளி விவரம் முற்றிலும் தவறானது. இந்தியாவில் இருந்து அதிகம் செய்யப்பட்ட ட்வீட்களே ” India Trends ” என ட்வீட்டரில் காண்பிக்கும். பாகிஸ்தான் நாட்டில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட விசயமே ட்ரெண்ட்ங்கில் காண்பிக்கும்.அதனால் ” India Trends “-இல் முதலிடம் பெரும் ட்ரெண்ட்ஸ்-க்கும் பாகிஸ்தான் நாட்டில் போடும் ட்வீட்டுக்கும் சம்பந்தமில்லை.

trends24 இணையத்தளத்திலும் twitter-இலும்  இன்று காலை ( 6 march2019 ) எடுக்கப்பட்ட தரவுகளை வைத்து பார்க்கலாம்.

உதாரணமாக, இன்று தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக #GoBackSadistkModi என  ட்வீட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு இன்றைய ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தான் நாட்டின் ட்வீட்டர் ட்ரெண்டிங்கில் பார்க்கையில் ட்ரெண்டிங் பட்டியலில் மோடி பற்றிய ஒரு வார்த்தைக் கூட இடம் பெறவில்லை.

#GoBacksadistModi இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் பார்க்கையில் அதிகம் தமிழில் செய்த ட்வீட்களே இருக்கிறது.

இதைத் தவிர, #GoBacksadistModi  உலக அளவில் ட்ரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்து வருகிறது. இதற்கு பாகிஸ்தான் நாட்டில் இருந்தும் கூட பதிவு செய்து இருக்கலாம் அல்லவா என்ற சிலர் கமெண்ட்டில் பதிவு விடுவார்கள்.

அவர்களுக்கு, உலக அளவில் #GoBacksadistModi  ட்ரென்ட் ஆகிய இருந்தாலும் பாகிஸ்தான் நாட்டின் ட்வீட்டர் ட்ரெண்டிங் பட்டியலில் அது இடம் பெறவில்லை என்பதை தெளிவாக பார்க்கவும்.

ஆக, #GoBacksadistModi , #GoBackModi  போன்ற ஹஷ்டாக்கள் பாகிஸ்தானில் இருந்து ட்ரெண்ட் செய்யப்படுகிறது எனக் கூறும் தகவல்கள் வதந்தியே என நிரூபிக்கப்படுகிறது. இதற்கு இன்றைய ட்வீட்டர் ட்ரெண்ட் ஆதாரமாகவே உள்ளது.

” மேலும், #GoBackModi-க்கு எதிராக #TnWelcomeModi ஹஸ்டாக் ட்ரெண்ட் செய்ய முயற்சித்த போது அது மகாராஷ்டிராவில் இருந்து பதிவிடப்பட்டன என்ற உண்மை பொது வெளியில் தெரிய வந்தது. இது தொடர்பாக செய்திகளிலும் கூட வெளியாகி உள்ளன” .

முக்கியமாக, பிரதமர் மோடிக்கு எதிராக ட்வீட்டர் ட்ரெண்ட் செய்வதால் தமிழ்நாட்டு மக்களுக்கும் பாகிஸ்தானுக்கும் ரகசிய தொடர்பு இருப்பது போன்றும், இங்குள்ளவர்களுக்கு ஆன்டி இந்தியன் பட்டங்களும் கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்தில் படிக்க : Is Pakistan responsible for #GOBackModi trend?

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader