This article is from Oct 12, 2019

Gobackmodi ட்விட்டர் ட்ரெண்டிங் பாகிஸ்தானியர்கள் வேலையா ?| தரவுகள் உண்மையா ?

பரவிய செய்தி

Gobackmodi ட்ரெண்டிங்கில் 58% ட்விட்கள் பாகிஸ்தான் நாட்டில் இருந்து வந்துள்ளன, இந்தியாவில் இருந்து 22 சதவீதமும் , சென்னையில் இருந்து வெறும் 4 சதவீதம் மட்டுமே வந்துள்ளன.

மதிப்பீடு

விளக்கம்

இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி தமிழகம் வரும் போதெல்லாம் #Gobackmodi ஹாஷ்டாக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யப்படுகிறது. அக்டோபர் 11-ம் தேதி சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்திற்கு சீனா தலைவர் ஜி ஜின்பிங் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரின் சந்திப்பும் நிகழ்ந்தது.

வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்திற்கு சீன நாட்டின் தலைவர் வருகை தருவதற்கு தமிழகத்தின் சமூக ஊடகங்களில் #TNwelcomesXiJinping என்ற ஹாஷ்டாக்கை ட்ரெண்ட் செய்தனர். அதே நேரத்தில் , இந்தியப் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக #Gobackmodi ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்யப்பட்டு ட்விட்டரில் முதலிடம் பிடித்தது. இம்முறை சீன மொழியில் Gobackmodi என்ற ஹாஷ்டாக்கையும் இணைத்து ட்ரெண்ட் செய்தனர். இது ஆளும் தரப்பினரின் ஆதரவாளர்களுக்கு கோபத்தை தூண்டி இருந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக #Gobackmodi ஹாஷ்டாக் செய்தது பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாத குழுக்கள் என்ற செய்தி வெளியாகத் துவங்கி இருக்கிறது . குறிப்பாக, பாகிஸ்தான் நாட்டில் இருந்தே போலியான ட்விட்டர் கணக்குகள் மூலம் #Gobackmodi ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக மீம் பதிவுகள் பதிவிடப்படுகிறது .

Twitter archived link  

இந்தியா நியூஸ் சேனலின் நெறியாளர்   என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் ” #Gobackmodi ஹாஷ்டாக் பின்னால் இருக்கும் உண்மை . 58% ட்வீட்கள் பாகிஸ்தான் நாட்டில் இருந்தும் , 4 சதவீதம் சென்னையில் இருந்தும் , 2 சதவீதம் தமிழும் , 23 சதவீதம் உருது மொழியிலும் வெளியாகி இருக்கிறது . இதை டைம்ஸ்நவ் வெளிக்கொண்டு வந்ததாக குறிப்பிட்டு மீம்ஸ் ஒன்றையும் பதிவிட்டு இருந்தார். 

News archived link 

இதேபோன்று, தினத்தந்தி செய்தி இணையதளத்தில் வெளியான செய்தியிலும் ” பாகிஸ்தானில் இருந்து  58 சதவீத டுவிட்டுகள் போடப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து குறைவான டுவிட்டுகளே, 2 சதவீதம் மட்டுமே தமிழ் டுவிட்டுகள், 23 சதவீத உருது டுவிட்டுகள் வெளியாகி உள்ளதாகவும் , உளவுத்துறை விசாரணை நடந்தி வருவதாகவும் கூறி இருக்கின்றனர்.

பழைய தரவுகள் : 

#Gobackmodi ஹாஷ்டாக் பின்னால் பாகிஸ்தான் இருக்கிறதா என்ற தலைப்பிற்கு பிறகு செல்லலாம். முதலில், 58% ட்வீட்கள் பாகிஸ்தான் நாட்டில் இருந்தே வந்துள்ளது என கூறும் ட்விட்டர் தரவுகள் குறித்து பார்ப்போம்.

இதேபோன்று, மார்ச் 2019-ம் தேதி பிரதமர் மோடிக்கு எதிராக #Gobackmodi ஹாஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. அப்பொழுதும், இதற்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது தொடர்பாக விரிவான செய்தியை நாம் வெளியிட்டு இருந்தோம்.

ட்விட்டரில் #Gobackmodi ஹாஷ்டாக் எந்த நாட்டில் , எந்த மொழியில் ட்ரெண்ட் செய்யப்பட்டது என அளிக்கப்பட்டு இருக்கும் தரவுகள் மார்ச் மாதம் #Gobackmodi ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்யப்பட்ட பொழுது அளிக்கப்பட்ட தரவுகளே என்பதை இரண்டையும் ஒற்றுமைப்படுத்தி பார்க்கும் பொழுது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் படிக்க : #GoBackModi ட்ரெண்ட் ஆக பாகிஸ்தான் காரணமா ?

அப்பொழுது #Gobackmodi ஹாஷ்டாக் ட்ரெண்ட்க்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இதே தகவல்களுடன் வெளியான செய்தித்தாள் பக்கத்தை ரங்கராஜ் பாண்டே அவர்களும் பகிர்ந்து இருந்தார். ஒரே தரவுகளை வைத்தே பாகிஸ்தான் காரணம் எனக் கூறி வருகின்றனர்.

உளவுத்துறை விசாரணை : 

டைம்ஸ் நவ் செய்தியில் , #Gobackmodi ஹாஷ்டாக் ட்ரெண்ட் பின்னால் தமிழக எதிர் கட்சிகள் இருப்பதாக உளவுத்துறை சந்தேகமடைந்ததாகவும், ஆனால் விசாரணையை தீவிரப்படுத்தியதில் இதற்கு பின்னால் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இருப்பதாக தெரிவித்து இருந்தனர். அதில், பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் #Gobackmodi ஹாஷ்டாக்கை பயன்படுத்தி வெளியிட்ட ட்வீட்கள் இருந்தன.

Twitter archived link 

Twitter archived link 
தமிழக ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #Gobackmodi ஹாஷ்டாக் ட்ரெண்டிங் செய்யப்பட்டு முதலிடத்தில் இருந்துள்ளது. இங்கு பதிவிடும் ட்வீட்களே ட்ரெண்டிங்கில் இருக்கும். அது , கட்சி ஐ.டி பிரிவுகளோ , நிறுவனங்களோ அல்லது தனி நபரோ யாராகவும் பதிவிட்டு இருக்கலாம்.

பாகிஸ்தானியர்கள் , காஷ்மீர் பிரச்சனைக்கு ஆதரவு அளிப்பவர்கள் #Gobackmodi ஹாஷ்டாக்கை பயன்படுத்தி ட்வீட் செய்து இருப்பது உண்மையே. ஆனால், பாகிஸ்தான் நாட்டில் ட்விட்டர் ட்ரெண்டிங் ஆகும் அளவிற்கு பதிவாகவில்லை என்பதை trends24 தளத்தில் பார்க்கும் பொழுது தெரிந்து கொள்ள முடிகிறது .

பயங்கரவாத குழுக்கள் உடன் பாகிஸ்தான் இளைஞர்கள் இணைந்து #Gobackmodi ஹாஷ்டாக்கை ட்ரெண்ட் செய்கிறார்களா என்பதை இந்திய உளவுத்துறையே ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். 

முடிவு : 

நம்முடைய ஆய்வில் , #Gobackmodi ஹாஷ்டாக்கில் 58 சதவீதம் பாகிஸ்தான் நாட்டில் இருந்து வருவதாக கூறுவது உள்ளிட்ட தரவுகள் கடந்த மார்ச் மாதத்திலேயே பகிர்ந்து உள்ளனர். அதனை அப்பொழுதே தவறான தகவல் என நாம் செய்தி வெளியிட்டு இருக்கிறோம்.

சமீப காலமாக #Gobackmodi ஹாஷ்டாக் ட்விட்டர் ட்ரெண்ட் அரசின் பார்வையை அதிகம் ஈர்த்துள்ளது. இதனாலே, #Gobackmodi ஹாஷ்டாக் குறித்த விசாரணை வரை சென்று இருக்கிறது. 

Please complete the required fields.




Back to top button
loader