கோமதி ஓட்டப்பந்தயத்தில் கிழிந்த ஷூ உடன் ஓடினாரா ?

பரவிய செய்தி
கோமதி பந்தயத்தில் அணிந்திருந்த காலணி பிஞ்சு பேனது மட்டுமில்ல இரண்டும் வேறு காலணி என்பதும் உண்மை.
விளக்கம்
ஆசிய தடகளப்போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கோமதி பற்றிய செய்திகளும், மீம்களும் சமூக வலை தளத்தில் அதிகம் பகிரப்படுகிறது.
இந்நிலையில் , ஆசிய தடகளப்போட்டியில் கோமதி இரு வேறு ஷூக்கள அதிலும் கிழிந்த ஷூவை அணிந்து ஓடியதாகவும் புகைப்படத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
இரு வேறு ஷூ :
ஓட்டப்பந்தத்தில் கோமதி இரு வேறு ஷூக்களை அணிந்து ஓடினார் என்பது உண்மை. ஆனால், பெரும்பாலான ஓட்டப்பந்தய வீரர்கள், வீராங்கனைகள் இரு வேறு ஷூக்களை அணிந்து ஓடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கோமதியின் இரு வேறு ஷூ பற்றிய பதிவுகளில் உசேன் போல்ட் உடைய படத்தை பகிர்ந்து ஓட்டப்பந்தய வீரர்கள் இரு வேறு ஷூக்களை பயன்படுத்துகின்றனர் எனக் குறிப்பிடுகிறார்கள்..
அது உண்மை தான். வீரர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப இரு வேறு ஷூக்களை பயன்படுத்துகின்றனர். 1912 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஜிம் ட்ரோப்பே இரு வேறு ஷூக்களை அணிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழிந்த ஷூ :
கோமதி நியூஸ் 18 தமிழ் செய்திக்கு அளித்த பேட்டியில் , கிழிந்த ஷூவை அணிந்தே ஓடியதாகவும், அதற்கான வசதிகள் இல்லாமலும் , தன் சொந்த பணத்தில் பயணம் செய்ததாகவும் பதில் அளித்து இருந்தார்.
கோமதி விளையாட்டுத்துறை இட ஒதுக்கீட்டில் அரசு பணியில் பணிபுரிந்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. எனினும், தகுந்த உதவிகள் இன்றி , ஏழ்மையிலும், தாம் சந்தித்த தடைகளை தாண்டி இன்று சாதித்து காட்டியுள்ளார்.
கோமதி இரு வேறு ஷூக்களை பயன்படுத்தியது உண்மையாக இருந்தாலும் அதற்கான காரணம் மற்ற வீரர்கள் பயன்படுத்தியது போன்று இருக்கலாம். எனினும், கிழிந்த ஷூவை தான் அணிந்ததாக கோமதியே தெரிவித்து உள்ளார்.
இங்கு திறமையாளர்களுக்கு பஞ்சமே இல்லை, உதவிகளே பஞ்சம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.