This article is from Jun 30, 2018

புரளிகளை ஒழிக்க களமிறங்கும் கூகுள் நிறுவனம்.

பரவிய செய்தி

புரளிகளுக்கு எதிராக போராடுவது மற்றும் பத்திரிகை துறைக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் 300 மில்லியன் டாலரைச் செலவிடுவதாக உறுதி அளித்துள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

கூகுள் நிறுவனம், இணையப் பத்திரிகை துறையை மேம்படுத்தவும் மற்றும் புரளிகளுக்கு எதிராகப் போராடுவதற்கு உதவியாக 300 மில்லியன் டாலரை முதலீடு செய்வதாக தெரிவித்துள்ளது.

விளக்கம்

புதிய தொழில்நுட்ப கருவிகளின்(tools) மூலம் செய்திகளை இணையத்தின் வாயிலாக படிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது மாபெரும் தகவல் தேடு தளமான கூகுள்.

செய்தித்தாள்கள் விளம்பரங்களின் மூலம் ஈட்டும் வருமானம் குறையத் தொடங்கியதால், டிஜிட்டல் காலக்கட்டத்தில் பத்திரிகைத்துறை மன அழுத்தத்திற்கு சென்றுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.

கூகுள் நிறுவனம், இணைய பத்திரிகை துறையை மேம்படுத்தவும் மற்றும் புரளிகளுக்கு எதிராக போராட உதவியாக 300 மில்லியன் டாலரை முதலீடு செய்வதாக தெரிவித்துள்ளது.

தேடு தளத்தில் தவறான செய்திகளை தடுப்பதற்கான வழிமுறைகளை ஏற்கனவே கண்டறிந்து தேடுதலை மாற்றியமைத்து வருகிறோம். எனினும், தற்போது கூடுதலாக செயல்பட வேண்டும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னாள் புரளி கட்டுரைகளை பிரபலப்படுத்துவதைக் கூகுள் கண்டறிந்துள்ளது. உதாரணமாக, 2017 ஆம் ஆண்டு லாஸ் வேகாஸ் நகரில் டொனால்டு ட்ரம்ப்-க்கு எதிர்ப்பு தெரிவித்து 50  பேரை சுட்டு கொன்ற கொலையாளி பற்றிய செய்திகள்.

“ Disinfo lab ” எனும் முயற்சியால், கணக்கீடு கருவியைப் பயன்படுத்தி மற்றும் பத்திரிகை மேற்பார்வையால் தேர்தல் காலங்களில் தவறான தகவல்களை மானிட்டர் செய்ய இயலும்.

“ Media Wise ” என்ற இத்திட்டத்தில், “ standford பல்கலைக்கழகத்துடன் இணைந்து “ கற்பனையான கதைகளில் இருந்து உண்மையை வேறுபடுத்தி” காட்டி புதிய வாசிப்பாளர்களுக்கு உதவி புரிய உள்ளோம்” என கூகுளின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

கூகுளின் இத்தகைய செயலால் பொருந்தாத செய்திகள், புரளிகள் ஆகியவை மக்களிடையே செல்வதை தடுக்க இயலும்.

கூகுளின் முதன்மை வணிக அதிகாரி philipp schindler கூறுகையில், “ இந்த நிறுவனம் செய்தி தொழில்துறையுடன் நெருக்கமாக இணைந்து இயங்கி அவர்களுக்கு வருவாயைப் பெருக்க உதவும் ”

கடந்த 15 ஆண்டுகளில், அச்சு ஊடகங்களின் தொழில் நலிவுற்றதால் பல அச்சு ஊடக நிறுவனங்கள் பத்திரிகையை ஆன்லைன் முறைக்கு மாற்றக் கடுமையாக முயற்சி வருகின்றனர்.

OC&C யின் ஆய்வில், 2020-ல் UK-ல் டிஜிட்டல் விளம்பரத்திற்கு செலவழிக்கப்படும் பணத்தில் 71 சதவீத பணத்தை கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் பெறும் என்று எதிர்ப்பார்ப்பதாக கூறியுள்ளனர்.

மேலும், செய்தி வாசிப்பில் சிறந்து விளங்கும் பல ஆன்லைன் செய்தி பக்கங்களுக்கு உதவி செய்வதாக philipp உத்திரவாதம் அளித்துள்ளார். உதாரணமாக, செல்போன்களில் இணையதளம் லோடிங் ஆவதை வேகமாக்குது போன்றவை.

“ இது தொடங்கம் மட்டுமே. செய்தி வெளியீட்டாளர்களுடன் நெருக்கமாக தொடர்ந்து செயல்பட்டு புதிய வழிகளில் சோதனைப் செய்து மக்களை சென்றடைந்தும் மற்றும் புதுவித அனுபவம் அளிக்கும் வகையில் கதை சொல்வதை உருவாக்குவோம் “ என்று கூறியுள்ளார்.

கூகுள் நிறுவனம் பத்திரிகை துறையின் வளர்ச்சியை பெருக்கவும், புரளிகளுக்கு எதிராக போராடுவதற்கும் முதலீடு செய்வதும், ஆதரவளிப்பதும் பாராட்டத்தக்க செயலாகும். இருப்பினும், நாம் பார்க்கும், படிக்கும் செய்திகள் உண்மையா ? இல்லையா ? என்பதை அறிந்த பிறகே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்தல் வேண்டும். இல்லையேல், எத்தனை கோடி செலவு செய்தாலும் புரளிகளை ஒழிக்க இயலாது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader