ஒவ்வொரு குடிமகனுக்கும் 5 ஆயிரம் நிவாரணம் கொடுப்பதாக பரவும் மோசடி செய்தி !

பரவிய செய்தி

ஒவ்வொரு குடிமகனுக்கும் 5000 ரூபாய் நிவாரண தொகை வழங்குவதற்கு எஃப்.ஜி அனுமதி அளித்துள்ளது மற்றும் வழங்கப்பட்டு வருகிறது.

மதிப்பீடு

விளக்கம்

முகநூல், வாட்ஸ் அப் குழுக்களில், ” FG* has finally approved and have started giving out free _R5000_ Relief Funds to each citizen. Below is how to claim and get yours credit Instantly as I have just did now https://bit.ly/free-safunds. *Note* : You can only claim and get credited once and it’s also limited so get your now Instantly. ” எனும் பார்வர்டு தகவல் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

கொரோனா வைரஸ் காரணமாக ஒவ்வொரு குடிமகனுக்கும் 5000 ரூபாய் நிவாரண தொகையை வழங்குவதாகவும், கீழே உள்ள லிங்கில் செய்து உங்களுக்கான தொகையை பெற்றுக் கொள்ளுங்கள் என bitly உடைய லிங்க் கொடுக்கப்பட்டு உள்ளது.

இது உண்மையில் நிவாரண தொகை என்ற பெயரில் செய்யப்படும் மோசடி வேலை. இதுபோன்ற லிங்க்கிற்குள் சென்றால் உங்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் அனைத்தும் கேட்கப்படும் மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாட்ஸ் அப் குழுக்களுக்கு பகிர்ந்தால் மட்டுமே தொகையை பெற முடியும் என்ற நிபந்தனையும் இருக்கும்.

FG Lockdown Fund என பகிரப்பட்டு வரும் ஃபார்வர்டு செய்தியில் குறிப்பிட்டு இருக்கும் FG ஆனது Federal Government என்பதை குறிக்கிறது. இந்திய அரசை Central government அல்லது Government of india என குறிப்பிடுவார்கள். இதுபோன்ற லிங்க்குகளை பகிர்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இங்கு யாருக்கும் அவ்வளவு பெரிய தொகையை வழங்க தேவையில்லை. மக்களுக்கு பண ஆசையைக் காட்டி அவர்களிடம் இருந்து தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ மோசடி செய்வதுண்டு. இன்றைய இணைய உலகில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதை அறிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க : தொழிலாளர்களுக்கு ரூ.1,25,000 நிதி பெற உரிமை உள்ளதாக பரவும் போலி இணையதளம் !

இதற்கு முன்பாகவும், தொழிலாளர்களுக்கு நிதி உரிமை பெற உரிமை உள்ளதாக, லைக், ஷேர் செய்தால் நடிகர் ராக் கட்டுக்கட்டாக பணம் கொடுப்பதாக பல லிங்க்குகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன. இதுபோன்றவையை உண்மை என்ன நம்ப வேண்டாம். எச்சரிக்கையாக இருங்கள்.

Advertisement

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button